'ஒரு வார்த்த கூட சொன்னது இல்ல'... 'சுக்கு நூறாகிய ரசிகர்களின் இதயம்'... 'பிளாக் பேந்தர்' கதாநாயகனுக்கு நேர்ந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

2020ம் ஆண்டு உலகமே பல துயரங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் கொரோனா என்றால் மறு பக்கம் பல பிரபலங்களின் எதிர்பாராத மரணம் என, உலக மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

'ஒரு வார்த்த கூட சொன்னது இல்ல'... 'சுக்கு நூறாகிய ரசிகர்களின் இதயம்'... 'பிளாக் பேந்தர்' கதாநாயகனுக்கு நேர்ந்த துயரம்!

2017ஆம் ஆண்டு மார்வெல் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட படம் ‘பிளாக் பேந்தர்’. இந்த படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த சாட்விக் போஸ்மேனை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் பிளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன். உலகம் முழுவதும் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்ததற்காகப் பல விருதுகளையும், ஒட்டுமொத்த கறுப்பின மக்களின் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சட்விக் போஸ்மேன்.

இந்த சூழ்நிலையில் சட்விக் போஸ்மேனுக்கு பெருங்குடலில் புற்று நோய் ஏற்பட்டது. இதற்காகக் கடந்த 4 ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சையிலிருந்த அவருக்கு, சிகிச்சை பலனளிக்காமல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சட்விக் வீட்டிலேயே அவரது உயிர் நேற்று பிரிந்துள்ளது. அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள சட்விக் போஸ்மேனின் மறைவு அவரது ரசிகர்களைச் சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

சட்விக் போஸ்மேனின் மறைவை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். முன்னதாக தனக்குப் புற்று நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து, சட்விக் போஸ்மேன் வெளிப்படையாக அறிவித்ததே இல்லை என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்