இது என்ன ரகம்னே தெரியலயே.. கரை ஒதுங்கிய வினோதமான உயிரினம்..பீச்சுக்கு வாக்கிங் போனவருக்கு ஏற்பட்ட ஷாக்.. வைரல் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடற்கரையில் கிடந்திருக்கிறது. அதன் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது என்ன ரகம்னே தெரியலயே.. கரை ஒதுங்கிய வினோதமான உயிரினம்..பீச்சுக்கு வாக்கிங் போனவருக்கு ஏற்பட்ட ஷாக்.. வைரல் புகைப்படம்..!

Also Read | "அப்பா அம்மா ரெண்டுபேருமே இறந்துட்டாங்க".. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் நிர்கதியான சிறுமி.. உலகம் முழுவதும் இருந்து குவியும் உதவிகள்.. வைரல் புகைப்படம்..!

கடல் பல வித்தியாசமான உயிரினங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது. அறிவியல் வளர்ச்சியில் மனிதர்கள் பல சாதனைகளை படைத்திருந்தாலும் இன்னும் கடல் குறித்து இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் கடற்கரையில் ஒதுங்கிய வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலின் தனித்துவத்தை மீண்டும் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

வாக்கிங்

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் டில்லோட்சன். இவர் அருகில் உள்ள மில்ஸ் கடற்கரைக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது பாறைகளின் நடுவே வித்தியாசமாக ஏதோ ஒன்று கிடப்பதை பார்த்த கிறிஸ்டின் அதன் அருகே சென்றிருக்கிறார். தோல்கள் உரிந்து, அழுகிய நிலையில் கிடந்த அந்த மீன் போன்ற உயிரினம் பார்க்கவே பயங்கரமாக இருந்திருக்கிறது. அதன் பற்கள் ஊசிகளை போல நீளமாகவும் கூர்மையாகவும் இருந்திருக்கின்றன. இந்நிலையில், அதனை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் அவர் வெளியிட, தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Bizarre Sea Creature With Needle Like Teeth Washes Ashore In US

இதுகுறித்து பேசிய கிறிஸ்டின்,"கடற்கரையில் நடப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. இது மிகவும் சுவாரஸ்யமானது என்று நினைத்தேன். ஏனென்றால் இது நான் பார்த்த எந்த மீனைப் போலவும் இல்லை. அது ஆழ்கடல் உயிரினங்களில் ஒன்று போல் இருந்தது" என்றார்.

வெளியே வந்த உண்மை

இந்நிலையில், இந்த உயிரினம் குறித்து கடல்வாழ் உயிரங்களின் நிபுணர்குழு மேற்கொண்டு வந்தனர். இதில் அந்த உயிரினம் Monkeyface prickleback eels என்னும் மீன் தான் என நிபுணர்கள் கண்டறிந்திருக்கின்றனர். குரங்கு போலவே முகத்தினை கொண்டிருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்ததாக கூறுகிறார்கள் உயிரியலாளர்கள். கலிபோர்னியாவின் ஓரிகான் முதல் பாஜா வரையிலும் மெக்சிகோவிலும் இந்த மீன்கள் காணப்படுவதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், பாறைகள் அதிகம் இருக்கும் இடங்களில் இந்த மீன்கள் அதிகளவில் வசிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விசித்திர மீனின் புகைப்படம் சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | செல்ல நாய்க்கு பிறந்தநாள்.. 100 கிலோவில் கேக்.. 4000 பேருக்கு விருந்து போட்ட தொழிலதிபர்.. மிரண்டுபோன பொதுமக்கள்..!

BIZARRE, SEA CREATURE, BIZARRE SEA CREATURE, US

மற்ற செய்திகள்