மனிதர்களை போலவே வாய்.. Beach ல கரை ஒதுங்கிய வித்தியாசமான உயிரினம்.. வைரல் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் மனிதர்களை போலவே வாய் அமைப்பு கொண்ட வினோத உயிரினம் ஒன்று கரையொதுங்கி இருக்கிறது. இந்த வித்தியாசமான உயிரினத்தின் புகைப் படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
சுட்டெரிக்கும் சூரியன்.. பிளக்கும் வெயில்.. 72 வருஷத்துல இப்படி இல்ல.. அதிர்ச்சி ரிப்போர்ட்.. எங்க?
பீச்
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில் இருக்கிறது போண்டி கடற்கரை. இந்த பகுதியை சேர்ந்த லாம்பர்ட் என்பவர் கடந்த 5 ஆம் தேதி கடற்கரையில் உடற்பயிற்சி செய்ய சென்றிருக்கிறார். அப்போது தூரத்தில் கருப்பு நிறத்தில் வித்தியாசமான ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறார். ஆர்வத்தின் காரணமாக அதன் அருகில் சென்ற லாம்பர்ட் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
தோராயமாக அரை மீட்டர் நீளம் இருந்த அந்த உயிரினத்தின் வாய் பகுதி மனிதர்கள் போலவே இருந்திருக்கிறது. இதனை வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் லாம்பர்ட் வெளியிட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சுறா
தோல் மற்றும் பின்பகுதியில் வால் போன்ற பகுதி இருப்பதால் இது எலும்பு சுறாவாக இருக்கலாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். மேலும், இந்த கடற்கரையில் இதுபோன்ற உயிரினத்தை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்கிறார்கள். இதுகுறித்து பேசிய லாம்பர்ட்," நான் 20 ஆண்டுகளாக இந்த கடற்கரைக்கு வருகிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு உயிரினத்தை பார்த்ததில்லை. முதலில் அதை பார்த்தபோது வாய் கீழ்ப்புறத்தில் இருந்தது. சுறாவின் தோலுடன் இருந்த அந்த உயிரினத்தில் வழக்கமாக சுறாவில் தென்படும் முதுகுத் தண்டு இருக்கவில்லை. ஆகவே நான் குழப்பமடைந்தேன்" என்றார்.
விலகிய மர்மம்
கடற்கரையில் வித்தியாசமான உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் அறிந்து விரைந்துவந்த சிட்னி கடல்சார் ஆய்வு பிரிவின் தலைவர் லெட்டிடியா ஹன்னான் இதுகுறித்து பேசுகையில்," இது ஒரு காஃபின் ரே (coffin ray) மீன் தான். இதனை இந்தப் பகுதி மக்கள் ஆஸ்திரேலிய numbfish என்றும் அழைக்கிறார்கள். உயிரிழந்து நீரில் மிதந்ததால் அதன் உள்ளே வாயு உட்சென்று உடல் பெரிதாகிவிட்டது" என்றார்.
ஆஸ்திரேலிய கடற்கரையில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கரையொதுங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்