நாட்டின் மிகப்பெரிய திருட்டு.. "நகையை கண்டுபிடிச்சு கொடுக்குறவங்களுக்கு 57 கோடி ரூபாய் தர்றேன்".. தொழிலதிபரின் மகள் வெளியிட்ட பரபர அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஒருவர் காணாமல்போன தனது நகைகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 57 கோடி ரூபாய் சன்மானமாக அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
திருட்டு
பிரிட்டனை சேர்ந்த பெர்னி எக்லெஸ்டோன் பார்முலா 1 கார் பந்தயங்களை நடத்தி வருகிறார். இவருடைய குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவரது மகள் தமரா எக்லெஸ்டோன் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் தனது கணவருடன் லண்டனில் இருந்து பின்லாந்துக்கு சென்றிருந்தார். அதே நாளில் லண்டனின் கென்சிங்டன் அரண்மனை தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்திருக்கிறார்கள்.
வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையிலும் இருந்த விலை உயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது. இது இங்கிலாந்தில் நடந்த மிகப்பெரிய திருட்டில் ஒன்றாக கருதப்படுகிறது. தமராவின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 247 கோடி ரூபாய்) ஆகும்.
காத்திருப்பு
இந்நிலையில், காணாமல்போன தனது நகைகள் மீண்டும் கிடைக்கும் என ஆண்டுக்கணக்கில் தமரா காத்திருந்திருக்கிறார். ஆனால், இதுவரையில் ஒரு ஜோடி தோடுகள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், "காணாமல்போன எனது நகைகளை நான் மீண்டும் பார்க்க முடியாது என்ற உண்மையை நான் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால், அவற்றுள் எங்களது குடும்பத்தின் பாரம்பரிய பொருட்கள் இருக்கின்றன. அவற்றின் பண மதிப்பை விட அவை எனக்கு மதிப்பு மிக்கவை" என்றார்.
சன்மானம்
இதனை தொடர்ந்து தனது நகைகளை கண்டுபிடித்துக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் அளிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார் தமரா. அதன்படி தனது நகைகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு காணாமல்போன நகைகளின் மதிப்பில் 25 சதவீதத்தை (57.45 கோடி ரூபாய்) சன்மானமாக அளிக்க இருப்பதாக தமரா அறிவித்துள்ளார்.
மேலும், இந்த திருட்டில் சந்தேக நபராக கருதப்படும் டேனியல் வுகோவிச்சை லண்டன் காவல்துறையிடம் ஒப்படைப்பவர்களுக்கு 2.3 கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் எனவும் தமரா அறிவித்திருக்கிறார். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | இதுவரை இவ்வளவு பெரிய பிங்க் வைரத்தை நாங்க பார்த்தது இல்ல.. நிபுணர்களையே திகைக்க வச்ச வைரக்கல்..!
மற்ற செய்திகள்