“கொரோனா பரவலின் மோசமான நிலையை உலகம் இன்னும் எதிர்கொள்ளல”.. பில்கேட்ஸ் சொன்ன பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரி்க்கை செய்துள்ளார்.

“கொரோனா பரவலின் மோசமான நிலையை உலகம் இன்னும் எதிர்கொள்ளல”.. பில்கேட்ஸ் சொன்ன பரபரப்பு தகவல்..!

சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் இதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வாதாரங்களை இழந்தனர்.

இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். அதில், கொரோனா தொற்றின் மிக மோசமான நிலையை உலகம் இதுவரை எதிர்கொள்ளவில்லை. இன்னும் மாறுபாடு ஏற்பட்டு கொரோன வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் உலக நாடுகள் பெருந்தொற்று தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க போதிய வசதிகளை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் சீனாவின் பல பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக பரவ ஆரம்பித்தது. அதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் பில்கேட்ஸ் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

CORONA, CORONAVIRUS, BILLGATES

மற்ற செய்திகள்