"48 வருஷத்துக்கு முன்னாடி என் Resume இதுதான்".. பில் கேட்ஸ் பகிர்ந்த போட்டோ.. அப்போவே அப்படியா? வியந்துபோன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் தனது பழைய Resume-ஐ பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"48 வருஷத்துக்கு முன்னாடி என் Resume இதுதான்".. பில் கேட்ஸ் பகிர்ந்த போட்டோ.. அப்போவே அப்படியா? வியந்துபோன நெட்டிசன்கள்..!

Also Read | வாழ்க்கையில முக்கால்வாசி நாள் வானத்துலயே கழிச்சிருக்காங்க.. உலகின் வயதான விமான பணிப்பெண்.. கின்னஸ் நிர்வாகம் கொடுத்த அங்கீகாரம்..!

பில் கேட்ஸ்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1955 ஆம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ் உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினை துவங்கியவர்களில் ஒருவராவார். இளம் வயதிலேயே புரோகிராமிங் செய்வதில் வல்லவராக திகழ்ந்த பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்கினார்.

உலக பணக்காரர்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் வெற்றிநடை போடத்துவங்கிய காரணத்தினால் பெரும் செல்வந்தர் ஆனார் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து 12 முறை முதலிடத்தில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த போர்ப்ஸ் இதழிலின் அடிப்படையில் இவர் உலகின் நான்காவது பணக்காரராக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மனிதாபிமான சேவைகளையும் உலகம் முழுவதிழும் தனது அறக்கட்டளை மூலமாக பில் கேட்ஸ் செய்து வருகிறார்.

Bill Gates shares his resume from 1974 Netizen React

Resume

இந்நிலையில், பில் கேட்ஸ் தனது LinkedIn பக்கத்தில் 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய Resume-ஐ பகிர்ந்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்த போது இந்த Resume-ஐ தயார் செய்திருக்கிறார் அவர். இதில் தனது விருப்ப துறைகளாக "சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் அல்லது சிஸ்டம்ஸ் புரோகிராமர்" எனக் குறிப்பிட்டுள்ளார் கேட்ஸ்.

மேலும், அவர் தனது உயரம் மற்றும் எடையையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவரை சார்ந்தவர்கள் யாரும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹார்வர்டில் இயங்குதள அமைப்பு, தரவுத்தள மேலாண்மை, கம்பைலர் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கணினி கிராஃபிக்ஸ் போன்ற படிப்புகளை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்களுடையது சிறப்பாக இருக்கும்

பில் கேட்ஸ் தனது Resume-ல் FORTRAN, COBOL, ALGOL, BASIC போன்ற நிரலாக்க மொழிகளில் தனக்கு இருக்கும் அனுபவம் குறித்து பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து,"நீங்கள் சமீபத்தில் பட்டம் பெற்றவராக இருந்தாலும் சரி அல்லது கல்லூரியில் இருந்து வெளியேறியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முந்தைய என்னுடைய Resume-ஐ விட உங்களுடையது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bill Gates shares his resume from 1974 Netizen React

இந்த புகைப்படம் வைரலாகவே, நெட்டிசன்கள் "ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த Resume" என்றும்,"இதனை 48 ஆண்டுகள் பழமையானது என்று சொல்ல முடியாது. அத்தனை சிறப்பாக இருக்கிறது" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | லவ்‌.‌.. லிவிங்.. டாட்டூ என பரவசமாய் போய் 13 நாளில் முடிவுக்கு வந்த பரபரப்பு காதல்.!

BILL GATES, BILL GATES RESUME, பில் கேட்ஸ்

மற்ற செய்திகள்