எனக்கு 'அத' இந்தியாவுக்கு தர்றதுல சுத்தமா 'இன்ட்ரெஸ்ட்' இல்ல...! என்ன பொசுக்குன்னு பில்கேட்ஸ் 'இப்படி' சொல்லிட்டாரு...? - 'அந்த' பேட்டர்ன் எங்ககிட்ட மட்டும் தான் இருக்கும்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வளரும் நாடான இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசி பார்முலாவை பகிர்ந்து கொள்ளமாட்டோம் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

எனக்கு 'அத' இந்தியாவுக்கு தர்றதுல சுத்தமா 'இன்ட்ரெஸ்ட்' இல்ல...! என்ன பொசுக்குன்னு பில்கேட்ஸ் 'இப்படி' சொல்லிட்டாரு...? - 'அந்த' பேட்டர்ன் எங்ககிட்ட மட்டும் தான் இருக்கும்...!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து படிநிலைகளிலும் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் பரிசோதனை அளவிலேயே மருந்துகளின் உற்பத்தியும் இருப்பதால் மக்கள் சிறிது பதற்றத்துடன் இருந்து வருகின்றனர். இருந்தாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு ஆகிய தடுப்பூசிகள், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்

கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை ஆஸ்டா ஜென்கா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த நிலையில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதால், பரவலாக தடுப்பூசி சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில், வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்யவும், தடுப்பூசி தயாரிக்கவும் கேட்ஸ் பௌன்டேஷன் மூலம் முதலீடு செய்தவர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா.

இந்நிலையில் தடுப்பூசி பேட்டன் குறித்து பில்கேட்ஸிடம் கேட்கப்பட்டதற்கு, இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் தடுப்பூசிக்கான பேட்டனை பகிர்ந்து கொள்வதில் விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் உலக நாடுகளிடையேயும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இதற்கான காரணங்களையும் பில்கேட்ஸ் கூறியது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மாறியது.

அதாவது வளரும் நாடுகளில் நிபுணத்துவம் மற்றும் தடுப்பூசி உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு, டெக்னாலஜி ஆகியவை பற்றாக்குறையாக இருப்பதால், கொரோனா தடுப்பூசி பேட்டனை பகிர்ந்து கொள்வது தேவையற்றது எனத் தெரிவித்தார்.

இதனால் பில்கேட்ஸ்ஸிற்கு பல எதிர்க்கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சிலர் வளரும் நாடான இந்தியா, கொரோனா தடுப்பூசிக்கான டெக்னாலஜியை விரைவாக ஏற்படுத்தி, அதிக தடுப்பூசிகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதையும் பன்னாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மேலும், ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்டா ஜென்கா நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்பில், பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெரும் முதலீடு செய்திருப்பதாகவும், அந்த தடுப்பூசி மூலம் தற்போது பில்கேட்ஸ் லாபம் ஈட்டி வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்