“லட்சம் பேரை தாக்கி உலகம் முழுதும் பரவும்!”.. - அப்பவே சொன்ன பில்கேட்ஸ்!.. “வீட்டுக்கு அடியில உணவு சேமிச்சு வெச்சிருக்கோம்!”- அசர வைத்த மெலிண்டா கேட்ஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக உலகம் முழுவதும் ஆங்காங்கே லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரும்,  தங்களுக்குத் தேவையான அத்தியவாசிய பொருட்களை, குறிப்பாக உணவுப்பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொண்டுள்ளனர்.

“லட்சம் பேரை தாக்கி உலகம் முழுதும் பரவும்!”.. - அப்பவே சொன்ன பில்கேட்ஸ்!.. “வீட்டுக்கு அடியில உணவு சேமிச்சு வெச்சிருக்கோம்!”- அசர வைத்த மெலிண்டா கேட்ஸ்!

இந்த நிலையில் கொரோனா போன்றதொரு வைரஸ் தொற்று ஏற்பட்டு உலகமே ஸ்தம்பித்து, அதனால் சுத்தமான நீர், போதிய உணவு உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு வந்தால் ஒரு குடும்பமாக நாம் எங்கே செல்வது? அந்த சூழலை எப்படி சமாளிப்பது என்கிற பேச்சு பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் விவாதித்ததாகவும், அதனால் தங்கள் வீட்டு அடித்தளத்தில் சிறிது உணவை சேமித்து வைத்திருந்ததாகவும்,  இந்தக் கடினமான நேரத்தில் நாம் அனைவரும் இணைந்து கொரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என்றும் பில்கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் கூறியுள்ளார்.  மேலும் பேசியவர், முறையான உபகரணங்கள் இல்லாததால், கொரோனாவுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும், இந்த சூழ்நிலையை சமாளித்துக் கொண்டிருக்கும் நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்றுதான் தற்போதெல்லாம் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2018-ம் ஆண்டு ஒரு மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் பெயரைக் குறிப்பிடாமல் அதே சமயம் அந்த வைரஸின் ஆபத்தைப் பற்றியும் பேசியுள்ளார். அப்போது உலகையே அச்சுறுத்தக் கூடிய ஒரு ஆபத்தான தொற்று நோயால் உலகில் லட்சக் கணக்கானோர் உயிரிழக்கக் கூடுமென்றும் அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் உலக நாடுகள் ஒரு போருக்கு தயாராவது போல் தயாராகும், ஆனால் நம்மாள் எந்த நாட்டுக்கும் சில மணி நேரங்களில் பயணம் செய்ய முடியும் என்பதால் இந்த வைரஸ் உலகம் முழுவதும் எளிதில் பரவும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதேபோல் 2015- ஆம் ஆண்டு மற்றொரு மாநாட்டில், தனது சிறு வயதில் அணுசக்தி யுத்தம் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகவும், அப்படியானதொரு நெருக்கடியான கால கட்டத்தில் உதவுவதற்காகத் தம் வீட்டின் அடித்தளத்தில் பெரிய பீப்பாய் ஒன்றில் தண்ணீர், உணவுகள் உள்ளிட்டவற்றை சேமித்து வைத்திருந்ததாகவும், அவர் எதிர்பார்த்தது போலவே அணுசக்தி யுத்தம் வந்தபோது மொத்த குடும்பத்தினரும் தம் வீட்டின் அடித்தளத்தில் பதுங்கிக் கொண்டு, ஏற்கனவே சேமித்து வைத்திருந்த உணவை உட்கொண்டதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.