காபூலில் உயிர் தியாகம் செய்த அமெரிக்க வீரர்களின்... இறுதிச்சடங்கில் அதிபர் பைடன் செய்த மோசமான செயல்!.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் செய்த ஒரு செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

காபூலில் உயிர் தியாகம் செய்த அமெரிக்க வீரர்களின்... இறுதிச்சடங்கில் அதிபர் பைடன் செய்த மோசமான செயல்!.. வைரலாகும் வீடியோ!

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் 13 பேரின் சவப்பெட்டிகளும் காபூலிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டன. அவர்கள் 13 பேரும், காபூலில் ஐஎஸ்ஐஎஸ்-கே (ISIS-K) தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 170 பேருடன் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

அவர்களது சவப்பெட்டிகள் அமெரிக்காவிலுள்ள Delaware என்ற இடத்துக்கு வந்தடைந்த நிலையில், அங்கு திடீரென வருகை புரிந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அப்போது, அவர் உட்பட அங்கிருந்த அனைவரும் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் தங்கள் மார்பில் கைவைத்தபடி நின்றனர். ஆனால், ஜோ பைடன் மட்டும் தனது இடது கையைத் தூக்கி தனது மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தார்.

இந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க வீரர்களை இழந்து விட்ட கோபத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் முதல் மக்கள் வரை, "அமெரிக்க அதிபருக்கு வீரர்களுக்கு கௌரவம் செலுத்துவதை விட வேறு என்ன அவசர வேலை இருக்கிறது, அஞ்சலி செலுத்தும் நேரத்தில் அவர் நேரம் பார்த்து என்ன செய்துவிடப்போகிறார்" என சமூக ஊடகங்களில் கொந்தளித்துள்ளார்கள்.

 

 

 

 

மற்ற செய்திகள்