"இந்த தப்பு மட்டும் நடந்துடவே கூடாது... பலரோட உயிருக்கே ஆபத்தாகிடலாம்"... 'தடுப்பூசி விஷயத்தில் FDAவின் முக்கிய எச்சரிக்கை!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

"இந்த தப்பு மட்டும் நடந்துடவே கூடாது... பலரோட உயிருக்கே ஆபத்தாகிடலாம்"... 'தடுப்பூசி விஷயத்தில் FDAவின் முக்கிய எச்சரிக்கை!!!'...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் அதற்கான தடுப்பூசி  கண்டுபிடிக்கும் பணிகள் பல நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் ஆகியவற்றின்  தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனை முடிந்து விற்பனைக்கு தயாராகி வருகின்றன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பின் சோதனைக்கு மேற்கண்ட நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இந்த சோதனையில் இந்த தடுப்பு மருந்துகள் வெற்றிபெற்றால் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 

Beware Of Covid-19 Scams As Vaccine Approaches FDA Approval

இதற்கிடையே வரும் ஜனவரி மாதம் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்ய தனியார் நிறுவனங்கள் அதீத போட்டியில் ஈடுபடலாம் என ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது போலி தடுப்பு மருந்துகள் பலவற்றை விற்க சில நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ளும் எனவும், அவர்களிடமிருந்து உலக நாடுகள் கவனமாக தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டும் எனவும் அமெரிக்க உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அங்கீகரிக்கப்படாத தடுப்பு மருந்துகளை எந்த அமெரிக்க மாகாண அரசும் ஏற்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதுவரை ரெம்டெசிவிர் தவிர எந்தவித வைரஸ் எதிர்ப்பு மருந்தும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Beware Of Covid-19 Scams As Vaccine Approaches FDA Approval

அரைகுறையாக உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தை உடலில் செலுத்துவதால் வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கு இது உயிருக்கே ஆபத்தாக அமையும் வாய்ப்பும் உள்ளது எனவும் அமெரிக்க சுகாதார துறை எச்சரித்துள்ளது. தடுப்பு மருந்து விற்பனை மருந்து நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடிய விஷயம் என்பதால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிக லாபத்தை இதன் மூலமாகவே இந்த நிறுவனங்கள் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மூன்றாம் கட்ட சோதனையை நிறைவு செய்யாத தடுப்பு மருந்துகள் பலவும் மறைமுகமாக விற்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மிக முக்கியமாக இதில் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மற்ற செய்திகள்