"மோதிரத்தை கேட்டா இதை ஏண்டா கைல கொடுக்குற.?..கடுப்பான மாப்பிள்ளை..பயங்கரமான Prank-ஆ இருக்கும்போலயே..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்திருமணத்தன்று மாப்பிள்ளையின் நண்பர் செய்த பிராங்க் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | வானத்தில் தோன்றிய ஜெல்லி மீன் போன்ற வடிவம்.. திகைத்துப்போன பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!
பிராங்க் வீடியோ
இணைய வசதி அதிகரித்த பின்னர் பிரபலமாகும் நோக்கில் பலர் வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுப்பது உண்டு. அவற்றுள் ஒன்றுதான் இந்த பிராங்க் என்னும் உத்தி. ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நேர்த்தியான நாடகத்தை பொது இடத்தில், பொது மக்களைப் பயன்படுத்தி செய்து காட்டுவதே பிராங்க் எனப்படுகிறது. மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இந்த பிராங்க் வீடியோக்கள் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டாலும் போகப்போக வரம்பு மீறிய பல காரியங்களிலும் பிராங்க் என்ற பெயரில் சிலர் நடந்து கொள்வதை நாம் இணையம் மூலமாக நன்கு அறிந்து இருக்கிறோம்.
தனிமனித சுதந்திரத்தையும் சமூக கண்ணியத்தையும் மீறும் எந்த நகைச்சுவையும் சட்டத்திற்குப் புறம்பானதே. ஆனால், தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவரும் இந்த திருமண வீடியோ பலரையும் வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறது.
மோதிரம்
இந்த வீடியோவில் மணமகளின் கரத்தில் மோதிரம் கோர்க்க தயாராக இருக்கிறார் மாப்பிள்ளை. பாதிரியார் தனது பணியினை முடித்த பிறகு, மோதிரத்தை மணப்பெண்ணுக்கு அணிவிக்குமாறு மாப்பிள்ளையிடம் தெரிவிக்கிறார். அந்த தருணத்திற்காக காத்திருந்த மாப்பிள்ளை, பின்னால் நிற்கும் தனது தோழனிடம் மோதிரத்தை கொடுக்குமாறு கேட்கிறார். அப்போதுதான் டிவிஸ்ட் வைக்கிறார் அந்த தோழர்.
தனது கோட்-க்குள் கைவிட்டு தேன் ரப்பரை எடுத்து நீட்ட, அரங்கமே அதிர்ந்து போகிறது. மாப்பிள்ளை என்ன சொல்வதென்றே தெரியாமல் தேன் ரப்பரையும் அந்த தோழரையும் மாற்றி மாற்றி பார்க்கிறார். இனிமேலும், மோதிரத்தை கொடுக்காவிட்டால் விபரீதமாகிவிடும் என ரப்பருக்குள் இருந்த மோதிரத்தை எடுத்தது மாப்பிள்ளையிடம் நீட்டுகிறார் அவர்.
கல்யாணத்தன்று மாப்பிள்ளையிடமே அவரது நண்பர் பிராங்க் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்