'4 வருஷமா சிம்பன்சி குரங்குடன் சந்திப்பு'... 'அந்த அம்மாவோட நடவடிக்கை சரியில்லையே'... விசாரித்த அதிகாரிகளுக்கு 'ஹார்ட் அட்டாக்' வரும் அளவிற்கு இருந்த பெண்ணின் பதில்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிம்பன்சி குரங்கை 4 வருடங்களாகத் தொடர்ந்து சந்தித்து வந்த பெண்ணை விசாரித்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

'4 வருஷமா சிம்பன்சி குரங்குடன் சந்திப்பு'... 'அந்த அம்மாவோட நடவடிக்கை சரியில்லையே'... விசாரித்த அதிகாரிகளுக்கு 'ஹார்ட் அட்டாக்' வரும் அளவிற்கு இருந்த பெண்ணின் பதில்!

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் Adie Timmermans. இவர் Antwerp மிருகக்காட்சி சாலையில் இருக்கும் 38 வயது மிக்க ஒரு சிம்பன்சி குரங்கக்குடன் அதிக நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். மனிதர்கள் விலங்குகளுடன் பாசமாக இருப்பது வழக்கம். இதனால் Adieயை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் Adie 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதே மிருகக்காட்சி சாலைக்கு வருவதும், அங்கு வந்தால் அதே சிம்பன்சி குரங்குடன் மட்டுமே தனது நேரத்தைச் செலவிடுவது என இருந்துள்ளார். இதனால் என்ன டா இது, அந்த பெண் மட்டும் இப்படி இருக்கிறார் என, அவரது நடவடிக்கையில் Antwerp மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Belgium Woman Banned From Visiting Chimpanzee In Zoo

சரி, எதுக்கும் இருக்கட்டும் அந்த பெண்ணிடமே என்னதான் சமாச்சாரம் என்ன கேட்டு விடலாம் என அதிகாரிகள் Adieயை அழைத்து விசாரித்துள்ளார்கள். அப்போது Adie சொன்ன பதிலைக் கேட்டு அதிகாரிகள் ஆடிப்போனார்கள். ஆம், ''நான் அவனை காதலிக்கிறேன். அவனும் என்னை காதலிக்குறான், எங்களுக்குள் ஒருவித உறவு இருக்கிறது. அது உங்களுக்கு எல்லாம் புரியாது'' எனக் கூறியுள்ளார்.

Adie காதலிப்பதாகக் கூறும் Chita என்ற சிம்பன்சி குரங்கிற்கு 38 வயதாகிறது. Adie கடந்த 4 வருடங்களாக வாரத்தில் ஒரு நாள் தவறாமல் அந்த குரங்கை வந்து சந்தித்ததன் மூலம் உண்மையிலேயே ஒரு உறவு ஏற்பட்டுள்ளது என்பதை அந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Belgium Woman Banned From Visiting Chimpanzee In Zoo

இது தான் அவர்களின் அதிர்ச்சிக்கு முக்கிய காரணம். நடுவே கண்ணாடி தடுப்புச் சுவர் இருந்தபோதிலும், இருவரும் சைகைகளையும், முத்தங்களையும் பரிமாறிக்கொள்வதுமாக தங்கள் உறவைப் பலப்படுத்தி வந்துள்ளார்கள். அதிகாரிகள் மேலும் பயப்பட இன்னுமொரு முக்கிய காரணம் உள்ளது.

Chita உடன் அந்த பெண் தனது உறவைப் பலப்படுத்தி வந்ததால், அந்த குரங்கு மற்ற சிம்பன்சி குரங்குகளுடன் உறவாடுவதில் பெரும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் Adie யின் காதலுக்குத் தடை போட நினைத்த மிருகக்காட்சி சாலை நிர்வாகம், இனிமேல் நீங்கள் இங்கு வர அனுமதியில்லை என அதிரடியாக அறிவித்தது.

Belgium Woman Banned From Visiting Chimpanzee In Zoo

இதனால் மிகவும் வேதனைக்கு உள்ளான Adie, ''மிருகக்காட்சிசாலையின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்றும், மற்ற பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஏன் என்னை அனுமதிக்கக்கூடாது?" எனக் கண்ணீருடன் கேள்வி எழுப்பி வருகிறார்.

மற்ற செய்திகள்