VIDEO: ‘கொரனோ வைரஸ்’ உருவாக காரணம் இதுதானா?.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரனோ வைரஸ் உருவாவதற்கு காரணம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

VIDEO: ‘கொரனோ வைரஸ்’ உருவாக காரணம் இதுதானா?.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

சீனாவில் கொரனோ வைரஸ் தாக்கி இதுவரை 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு வைரஸ் பாதிக்கப்பட்ட மக்கள் சாலையில் திடீரென மயங்கி விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சீன அரசு 7 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை கட்டியுள்ளது.

இந்த நிலையில் கொரனோ வைரஸ் உருவாக காரணம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், வீட்டின் மேற்கூரை ஓடுகளை சுத்தம் செய்யும்போது நூற்றுக்கணக்கான வௌவால்கள் பறக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இந்த வீடியோ 2011-ல் அமெரிக்காவில்  ஃபுளோரிடா பகுதியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ உண்மையில் மியாமியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவர் பதிவேற்றியுள்ளார். இதில் ஸ்பானிஷ் மொழியில் பணியாளர்கள் பேசும் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோவில் இருக்கும் ஆடியோவிற்கு பதிலாக பின்னணி இசை சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாவட்டத்தில் உள்ள வூகான் பகுதி கடல் உணவு சந்தையில் இருந்து கொரனோ வைரஸ் பரவியதாக கருதப்படுகிறது. இதனால் இந்த வைரல் வீடியோவில் உள்ள செய்திகள் உண்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைதன்மையை அறியாமல் பரப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

VIRAL, CORONAVIRUSCHINA