'தவறுதலா பணம் அனுப்பிட்டோம்'- 2 ஆயிரம் பேருக்கு 1,310 கோடி ரூபாயை அனுப்பிய வங்கி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வங்கி ஒன்று தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சுமார் 1,310 கோடி ரூபாயை தவறுதலா அனுப்பி உள்ளது.

'தவறுதலா பணம் அனுப்பிட்டோம்'- 2 ஆயிரம் பேருக்கு 1,310 கோடி ரூபாயை அனுப்பிய வங்கி..!

ஐக்கிய நாடுகளின் வங்கிகளில் ஒன்றான சான்டேண்டர் வங்கி கிறிஸ்துமஸ் தினத்தில் தெரியாமல் தவறுதலாக தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சுமார் 130 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 1,310 கோடி ரூபாய்) தொகையை செலுத்தி உள்ளது. இந்த மொத்தத் தொகையும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு 75 ஆயிரம் பணப் பரிவர்த்தனைகளின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

bank accidently deposits 1,310 crore rs to customers' accounts

கிறிஸ்துமஸ் தினத்தில் சம்பளம் போடப்பட வேண்டிய வங்கிக் கணக்குகள் மற்றும் தொகை விபரங்கள் முன்னரே ஷெட்யூல் செய்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறின் காரணமாக ஒவ்வொரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கும் சுமார் 2 முறை சம்பளம் போடப்பட்டுள்ளது. அந்த வங்கியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இதுபோல் கூடுதல் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

bank accidently deposits 1,310 crore rs to customers' accounts

இதுகுறித்து சான்டேண்டர் வங்கி நிர்வாகத்தினர் கூறுகையில், “சில தொழில்நுட்ப சிக்கலின் காரணமான எங்களது கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு பேமண்ட்ஸ் அனைத்தும் 2 முறை பரிவர்த்தனை ஆகியுள்ளது. எங்களது தவறுதான். நாங்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.  இன்னும் சில நாட்களில் தவறுதலாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மீட்டுவிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

bank accidently deposits 1,310 crore rs to customers' accounts

முதல் பணப் பரிவர்த்தனையை சரியாக செய்த வங்கி 2-வது முறையாக தனது பணத்தையே அனுப்பி தவறு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தத் தவறு நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் மேலாளர் ஒருவர் கூறுகையில், “முதலில் நான் தான் ஆயிரக்கணக்கான பேருக்கு பணத்தை அனுப்பி இந்தத் தவறை பண்டிகை நாள் அதுவுமாக செய்துவிட்டேன் என நினைத்தேன்.

வேலையில் பெரிய தவறு செய்துவிட்டோம், அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனால், நான் மட்டும் இல்லை. அது வங்கியின் தொழில்நுட்பக் கோளாறு. எப்படி இழந்த அத்தனைப் பணத்தையும் மீட்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.

“bank error recovery process” என்னும் முறையில் தவறுதலாக இழந்த பணத்தை மீட்டுவிடுவோம் என சான்டேண்டர் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை அந்த வங்கி தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MONEY, தவறுதலா பணம் அனுப்பிய வங்கி, 1, 310 CRORES RUPEES, BANK ACCIDENTAL DEPOSITS, SANTANDER BANK

மற்ற செய்திகள்