“சல்லி சல்லியாய் நொறுங்கிப் போன அரசு ட்ரோன் கேமரா!”.. ‘துவம்சம் செய்து முடித்த பின், கழுகு செய்த காரியம்!’.. விலை எவ்வளவு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்அரசுக்கு சொந்தமான 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ட்ரோன் கேமராவை வானத்திலேயே வைத்து பால்ட் கழுகு ஒன்று துவம்சம் செய்து சல்லி சல்லியாய் நொறுக்கிய சம்பவம் மிச்சிகனில் அரங்கேறியுள்ளது.
மிச்சகனில் கரையோர அரிப்புகள் குறித்து கண்காணிப்பதற்காக 162 உயரத்தில் அரசுக்கு சொந்தமான 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள(995 டாலர்) ரோன் கேமரா ஒன்றை சுற்றுச்சூழல் தர ஆய்வாளரும் ட்ரோன் பைலட்டுமான ஹண்டர் கிங் ஏழு நிமிடங்கள் பறக்கவிட்டிருந்தார்.
அப்போது வானத்தில் வட்டமிட்டபடி வந்த அமெரிக்காவின் பிரபலமான தேசிய பறவையான பால்ட் வகை கழுகு ஒன்று காற்றில் பறந்தபடி வைத்து துவம்சம் செய்து அதன் இறக்கைகளை பிய்த்து, ஏரியில் வீசியது. மணிக்கு 22 மைல் வேகத்தில் பயணம் செய்த இந்த ட்ரோன், தண்ணீரில் விழுவதற்கு 3.5 வினாடிளுக்கு முன்னர் கூட, 27 எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தின்போது, அருகில் பறவைகளைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தம்பதி, இந்த காட்சியை பார்த்ததாகவும் காற்றில் இருக்கும்போது கழுகு ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் கிங்கிடம் தகவல் கூறியுள்ளனர். மொத்தத்தில் ட்ரோனை ஒரு இரை என நினைத்து இந்த கழுகு தாக்கியிருக்கக் கூடும் என அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்