Arranged marriage-ல இருந்து காப்பாத்துங்க... பேனர் கட்டி பொண்ணு தேடும் இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளைஞர் ஒருவர் தன்னை Arranged marriage-ல் இருந்து காப்பாற்றும்படி பேனர் வைத்து வைரல் ஆகி உள்ளார்.

Arranged marriage-ல இருந்து காப்பாத்துங்க... பேனர் கட்டி பொண்ணு தேடும் இளைஞர்..!

லண்டனைச் சேர்ந்த 29 வயது இளைஞர் முகமது மாலிக். இவர் பிர்மிங்ஹாம் பகுதியில் சுமார் 20 அடி உயரத்துக்குப் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளார். அந்த பேனரில், “என்னை Arranged marriage-ல் இருந்து காப்பாறவும்” என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்து பலரையும் கவர்ந்துள்ளார் முகமது மாலிக்.

bachelor used a billboard advertisement to find a wife

மேலும், இதனுடன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் வேண்டும் எனவும் தன்னுடைய இன்ன பிற தேவைகளையும் கண்டிஷன்களையும் தெரிவித்துள்ளார். அத்தனையும் ஒரே பேனரில் கூறியிருக்கிறாரா? என நீங்கள் யோசிக்கலாம். இல்லை, இதற்காக தனியே ஒரு வெப்சைட் ஆரம்பித்து அந்த வெப்சைட் முகவரியை அந்த பேனரில் விளம்பரம் செய்துள்ளார் மாலிக்.

bachelor used a billboard advertisement to find a wife

அந்த வெப்சைட் முகவரிக்குச் சென்றால் முகமது மாலிக் குறித்த அத்தனைத் தகவல்களும் உங்களுக்குக் கிடைத்துவிடும். அதில், “நான் மாலிக். என்னை ஏதாவது ஒரு பேனரில் நீங்கள் பார்த்து இருக்கலாம். எனக்கு வயது 29. நான் லண்டனில் லா விடாவில் வசிக்கிறேன். நான் ஒரு தொழில் முனைவோர் ஆக இருக்கிறேன். பெரிய சாப்பாட்டு பிரியன் மற்றும் மத நம்பிக்கைகள் கொண்டவன். நான் ஒரு பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

bachelor used a billboard advertisement to find a wife

தன்னுடைய 20-களில் இருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை என்னுடைய வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். நான் எனது அம்மா-அப்பாவுக்கு ஒரே பிள்ளை. அதனால் அவர்களை நான் தான் பார்த்துக்கொள்கிறேன். இது பிடிக்காது என்றால் நமக்குள் ஒத்துவராது” எனக் குறிப்பிட்டு ஒரு பெரிய லிஸ்டே தயாரித்து வெளியிட்டுள்ளார்.

பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்தில் நிறைய பயன்கள் இருந்தாலும் தனக்கான ஒரு பெண்ணை தானே தேட வேண்டும் என விரும்புவதாக முகமது மாலிக் தெரிவித்துள்ளார்.

90S KIDS, ARRANGED MARRIAGE, BACHELOR, FIND A WIFE, அரேஞ்சுடு மேரேஜ், இளைஞர், திருமணம்

மற்ற செய்திகள்