என்னது டைனோசர் குட்டிகளா?.. உலக வைரலான வீடியோ.. பாத்துட்டு "ஜர்க்" ஆன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கடற்கரை ஒன்றில் டைனோசர் குட்டிகள் ஓடுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
டைனோசர்
பூமியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்து வந்தவை டைனோசர்கள். இவற்றில் பல வகைகள் இருந்ததாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். பூமி முழுவதும் வாழ்ந்துவந்த இந்த டைனோசர்களின் படிமங்கள் அப்போது ஆகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக, பூமியில் வந்து மோதிய மிகப்பெரிய விண்கல்லின் காரணமாக இந்த டைனோசர்கள் முழுவதுமாக அழிந்துபோயின.
இந்நிலையில் பார்ப்பதற்கு டைனோசர் குட்டிகளை போலவே இருக்கும் உயிரினம் ஒன்று கடற்கரையில் ஓடும் வீடியோ தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் கடற்கரைக்கு அருகே, ஒரு புதரில் இருந்து மேடான பகுதிக்கு டைனோசர் குட்டிகள் போல இருக்கும் உயிரினம் ஒன்று வேகமாக ஓடுகிறது. இது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில், இதே வீடியோவை தொடர்ந்து பார்த்தால் அவை டைனோசர் குட்டிகள் அல்ல என்பது தெரியவருகிறது.
உண்மையில் இது கோட்டி என்ற விலங்காகும். கோட்டிமுண்டிஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விலங்குகள் புரோசியோனிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பாலூட்டிகளாகும். பிரேசில் நாட்டில் பேசப்படும் துபியன் மொழியில் இருந்து கோட்டிமுண்டிஸ் என்னும் சொல் வந்திருக்கிறது.
இவை தலை முதல் வால் நுனி வரை 33 முதல் 69 செமீ நீளம் வளரக்கூடியவை. இவற்றின் வால் சற்றே நீளமாக இருக்கும். இந்த வீடியோவில் கோட்டிஸ்கள் மேடான பகுதியில் இருந்து புதருக்குள் ஓடிஒளியும் காட்சிகள் ரிவர்ஸ் மோடில் மாற்றப்பட்டுள்ளன. இவற்றின் நீளமான வால்களை பார்த்து, பலரும் இது டைனோசர் குட்டி என கமெண்ட் போட்டும், இந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகின்றனர்.
இந்த வீடியோவை இதுவரையில் 9.8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 47,000 பேர் இந்த வீடியோவினை லைக் செய்துள்ளனர்.
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்