"வாலுடன் பிறந்த குழந்தையா??".. ஒரு மில்லியனில் ஒரு குழந்தைக்கு நடக்கும் அதிசயம்!!.. வைரல் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்களை சோஷியல் மீடியா உள்ளிட்ட தளங்கள் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படி நாம் கேள்விப்படும் விஷயங்களில் பல வினோதமாகவும், அதே வேளையில் நம்ப முடியாத வகையிலும் கூட இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் அதே வேளையில் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்கள் முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை வழக்கமான ஒரு குழந்தை போல இல்லாமல் ஒரு விஷயத்தில் சற்று வினோதமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் அந்த பெண் குழந்தை பிறக்கும் போதும் முழுமையான வால் ஒன்றுடன் பிறந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.
ஒரு மில்லியனில் ஒரு குழந்தை தான் இப்படி முழுமையான வாலுடன் பிறக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இப்படி ஒரு அபூர்வ விஷயமும் தற்போது பலர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு முன்பும் உடலில் இருந்து வால் போன்ற ஒரு சிறிய வளர்ச்சியுடன் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் சிறிய சதை போல வால் தோற்றத்தில் தான் இருக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு முழுமையாக ஒரு வால் போல, தனி பாகம் போலவே இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல அந்த வாலைக் கிள்ளினால் குழந்தை அழுததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அந்த குழந்தையின் வால் உடலில் ஒரு பாகமாக வளர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தை பிறந்ததும் அதனை அகற்றினால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என கருதிய மருத்துவர்கள், அந்த குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் கழித்து சுமார் 5.7 சென்டிமீட்டர் நீளம் இருந்த அந்த வாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் வால் அகற்றப்பட்ட பிறகு குழந்தை நன்றாக இருப்பதாகவும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்