‘மூளைச்சாவு அடைந்த தாய்’.. ‘117 நாட்களுக்குபின் பிறந்த குழந்தை’.. சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 117 நாட்களுக்குபின் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

‘மூளைச்சாவு அடைந்த தாய்’.. ‘117 நாட்களுக்குபின் பிறந்த குழந்தை’.. சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்..!

செக் குடியரசைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அப்பெண்ணின் நரம்புமண்டலத்தில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மூழைச்சாவு அடைந்தார். இதனால் அப்பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

மூளைச்சாவு அடைந்த அப்பெண்ணுக்கு உயிர்வாழ்வதற்கான கருவிகளை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். இதனை அடுத்து கடந்த மாதம் அப்பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. 2.13 கிலோ எடையுடன் பிறந்த அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்ததும் தாய்க்கு பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் கருவிகள் நீக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு உயிர்காக்கும் கருவியை பொருத்தி குழந்தையை காப்பாற்றிய செயல் மருத்துவதுறையின் சாதனை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

BABY, BORN, CZECH, MOTHER, DEAD, BRAINDEAD