'வாய' மூடிட்டு இருக்காதீங்க... ப்ளீஸ்...! நீங்கலாம் எங்களுக்காக 'குரல்' கொடுப்பீங்களா...? - கண்ணீர் வடிக்கும் மனிதர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் செய்தியாளர் சந்திப்பில் மட்டுமே நல்லவர்கள் வேஷம் போடுவதாக ஆப்கான் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் பேட்டியளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில் அங்கிருக்கும் ஆப்கான் மக்களும், சிறுபான்மை மக்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். தாலிபான்கள் செய்தியாளர் சந்திப்பில் தாங்கள் திருந்திவிட்டதாக கூறினாலும் அங்கிருந்து வரும் மக்கள் கூறும் சம்பவம் நேர் எதிராக உள்ளது.
அதோடு, அங்கிருக்கும் சிறுபான்மையினரின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் நாட்டின், ஹசாரா என்னும் சிறும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அசாதுல்லா என்பவர் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
அதில், 'தாலிபான் செய்தியாளர் சந்திப்பில் சிறுபான்மையினரின் மீது எந்த தாக்குதலும் நடத்தமாட்டோம் என்று சொல்வது முழுக்க பொய். ஆப்கான் முழுவதுமாக தாலிபான் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு எங்கள் ஹசாரா சமூகம் அதிகப்படியான துன்புறுத்துதலுக்கு ஆளாக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக நாங்கள் இலக்கு வைக்கப்படுகிறோம். எங்களின் சொத்துக்கள், பணம் பறிக்கப்படுவதோடு, கடத்தல் மற்றும் காணமல் போகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
தாலிபான்கள் எங்களை போன்ற சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக அனைத்து வகையான குற்றங்களையும் செய்துள்ளனர், இப்போதும் செய்து வருகின்றனர். இவற்றை சர்வதேச ஊடகங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை.
இதற்கு முன், தாலிபான்கள் பாமியனில் உள்ள ஹசாரா தலைவர் அப்துல் அலி மசாரியின் சிலையை சேதப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல், 2001-ஆம் ஆண்டில் அதன் தலைவரான முல்லா முகமது உமரின் உத்தரவின் பேரில் தாலிபான்கள் புத்தர் சிலைகளை வெடிக்கச் செய்தது உலகம் அறிந்தது தான்.
ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் சமூகத்தின் மீது தினமும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், நாங்கள் UNHCR-க்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்கிறோம். இது அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இல்லை. முழு சர்வதேச சமூகமும் எங்களுக்கு உதவ வேண்டிய நேரம்' என அசாதுல்லா கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்