சுமார் 13 வருட உழைப்பில் அவதார் 2 -ஆம் பாகம்.. அதுவும் IMAX 3D-ல்.. படத்துல அப்படி என்ன தொழில்நுட்பம் இருக்கு!! Avatar: The Way of Water

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனையை படைத்தது. இந்த படம் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சுமார் 13 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான Avatar: The Way of Water (அவதார்: தி வே ஆஃப் வாட்டர்) திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சுமார் 13 வருட உழைப்பில் அவதார் 2 -ஆம் பாகம்.. அதுவும் IMAX 3D-ல்.. படத்துல அப்படி என்ன தொழில்நுட்பம் இருக்கு!! Avatar: The Way of Water

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் என மொத்தம் 160 மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்திலான இப்படம் தற்போது பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி, உலகம் முழுதுமான 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Avatar: The Way of Water James Cameron Avatar 2 hidden details

ஐ மேக்ஸ் தொழில்நுட்பத்தில் எதனால் அவதார் 2-ஆம் பாகம் படத்தில் காண வேண்டும் என்றால் அதற்கு அப்படி ஒரு விஷூவல் அனுபவம் தான் காரணம். ஐ மேக்ஸ்க்காக பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட அவதார் 2-ஆம் பாகம், டபுள் புரொஜக்‌ஷன் மெத்தேடில் திரையிடப்படுகிறது.

Avatar: The Way of Water James Cameron Avatar 2 hidden details

3டி தொழில்நுட்பத்திலான அவதார் 2-ஆம் பாகம் எனும் உலகத்துக்குள் சென்று அதன் ஒரிஜினல் விஷுவல் எக்ஸ்பீரியன்ஸை தரிசனம் செய்யக்கூடிய அந்த டபுள் புரொஜக்‌ஷனுக்கு தகுந்த ஒரு 3டி ஃபைபர் கண்ணாடியை ஐ மேக்ஸ் பிரத்தியகமாக வழங்குகிறது.

Avatar: The Way of Water James Cameron Avatar 2 hidden details

அறிவியல் புனைகதை வரிசையிலான இந்த படத்தின் முதல் பாகத்தை எடுக்கவே அப்போதைய தொழில்நுட்ப தட்டுப்பாடுகளால் ஜேம்ஸ் கேமரூனுக்கு டைட்டானிக் தாண்டி, 10 வருடம் தேவைப்பட்டது. இந்த நிலையில் சுமார் 13 வருடங்கள் கழித்து வெளியான இந்த படத்தை, முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கும் புரியும் வகையிலான திரைக்கதையுடன் உருவாக்கி எடுத்து வெளியிட்டுள்ளார்கள். முதல் பாகம் பெரும் தொழில்நுட்பத்தில் உருவாகியிருந்தாலும், செயற்கையாக இருப்பதாக நினைத்த ஜேம்ஸ் கேமரூன், இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க தண்ணீரில் பயணிப்பதால், அதற்கான தொழில்நுட்பங்களான . UNDERWATER MOTION CAPTURE, தோற்ற மெய்ம்மை எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் இந்த படம் உருவாக்கப்படவே இத்தனை ஆண்டுகளாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Avatar: The Way of Water James Cameron Avatar 2 hidden details

குறிப்பாக அவதார் 2-ஆம் பாகம் படத்திற்காக பிரத்யேக படகுகள், கப்பல்கள் வடிவமைக்கப்பட்டதுடன், சுமார் 16 ஆயிரம் கிலோ எடையிலான 360 டிகிரி இயக்கக் கட்டுப்பாட்டுத் தளம் (MOTION CONTROL BASE)அமைக்கப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டது. 3டி, 4K மற்றும் 48 FRAMES PER SECOND என்ற மூன்று தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய இந்த படத்தை அதற்கே உரிய கிரிஸ்டல் க்ளியரான பிரைட்னஸாக விஷூவல், ஐ மேக்ஸ் தரக்கூடிய ஸ்பீக்கர்கள் படத்தின் துல்லியமான சவுண்ட் எஃபெக்டை பிரித்தறிந்து அந்த ஒளி ஒலி அனுபவத்தை பெற முடியும்.

AVATAR: THE WAY OF WATER, JAMES CAMERON, AVATAR 2, AVATAR MAKING, AVATAR 2 MAKING, AVATAR 2 BEHIND THE SCENES, AVATAR 2 BTS, அவதார் 2, AVATAR 2 TECHNOLOGY, IMAX 3D

மற்ற செய்திகள்