'ஓட்டு போடலேனா டிரைவிங் லைசன்ஸ் கேன்சேல்'.. வாக்காளர்களுக்கு அரசு போட்ட ‘லாக்’!
முகப்பு > செய்திகள் > உலகம்நாட்டு குடிமக்கள் ஓட்டு போடவில்லை என்றால், அவர்களுடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்கிற ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டம் உலக நாடுகளைத் திரும்பி பார்க்கவைத்துள்ளது.
உலகம் முழுவதும், லைசன்ஸ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளுக்கான நிபந்தனைகளும், விதிமுறைகளும் வித்தியாசப்பட்டாலும், ஓட்டு போடாவிடின் லைசன்ஸ் கேன்சல் செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள இந்த புதிய அறிவிப்பு அந்நாட்டு வாக்காளர்களை கதிகலங்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்திய துணைக் கண்டத்தைத் தாண்டிய அனைத்து நாடுகளுக்குமே, வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமையாகவும், தனிமனிதக் கடமையாகவும் பார்க்கப்படும் சூழலில், வாக்களிப்பது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அதன்படி ஆஸ்திரேலியாவில் தேர்தலில் முறையான காரணத்தை விளக்கமாக அளிக்காமல், வாக்களிக்கத் தவறுபவர்கள் முதலொல் ரூ.1400 அபராதமும், அதைக் கட்ட தாமதமானால், ரூ.12 ஆயிரமாக அபராதம் அதிகரிக்கப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தொடர்ந்துய் இவ்வாறு வாக்களிக்கத் தவறுபவர்களின் ஓட்டுரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு, அந்நாட்டில் நடத்தப்பட்ட தேர்தலில் டார்வின் பென்சினர் என்பவர் வாக்களிக்கத் தவறியதால், அவருக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து அவர் அதனைக் கட்டியுள்ளார். இந்த சூழலில் இதனைச் சட்டமாக போட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.