"யார் என்ன வேணா சொல்லட்டும்.. இப்பதான் பணக்கஷ்டம் இல்லாம இருக்கேன்!".. 'கொரோனாவால் வறுமை'.. 'சூப்பர் டிரைவரக இருந்த இளம் பெண்' எடுத்த 'உறையவைக்கும்' முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டதோடு, பலரது வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொடுநோயான கொரோனாவை குணமாக்க மருந்து இல்லாததால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே கையாள வேண்டிய நெருக்கடிக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டன. இதன் விளைவாக தனிமனித இடைவெளியினையும், பொது முடக்கத்தையும் அந்தந்த நாடுகளும் அறிவித்தன.
ஆனால் மாதக்கணக்கில் இப்படியான பொது முடக்கங்கள் அமல்படுத்தப்பட்டதால், உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. பலரும் வேலை, வருமானம் உள்ளிட்டவற்றை இழக்க நேர்ந்தது. இப்படி பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய சுப்பர் டிரைவராக கார் ரேஸில் ஈடுபட்டு வந்த ரினி கிரேஸி என்கிற இளம் பெண், தனது வேலையை அடல்ட் துறையில் பணிபுரிவதற்காக மாற்றிக்கொண்டுள்ளார்.
இதற்கென கிளர்ச்சியூட்டும் விதத்தில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவும், வீடியோக்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். “இந்த துறைக்கு மாறியதால், நான் பொருளார ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறேன். வாழ்க்கையிலேயே நான் செய்த மிகச்சிறந்த செயல் இதுதான் என நினைக்கிறேன். இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. யார் என்னை என்ன சொல்லி அழைத்தாலும் பரவாயில்லை. நான் நன்றாகவே சம்பாதிக்கிறேன். இதை சவுகரியமாகவே உணர்கிறேன்” என்று ரினி கிரேஸி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்