“வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இதுவரை ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துமுள்ளனர்.

“வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'!

கொரோனா வைரஸ், தன்னால் தாக்கப்படுபவர்களுக்கு மூச்சுத் திணறல், உடலுறுப்புகள் செயல்பாட்டை இழக்க வைப்பது தொடங்கி ரத்தத்தை உறைய வைத்து ஆக்சிஜன் சப்ளையை தடுத்து நிறுத்துவது, அதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கி உயிரை பறிக்கும் வரை தன்னுடைய ஆதிக்கத்தை காட்டுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா, சிட்னி பல்கலைகழத்தை சேர்ந்த பேராசிரியர் ஷாவுன் ஜாக்சன் என்பவர் ஆய்வாளர்களுடன் இணைந்து, கொரோனா வைரஸால் தாக்கப்படுபவரின் உடலில் ரத்தம் உறைவதைத் தடுக்க மருந்து ஒன்றைச் சோதனை முறையில் கண்டறிந்துள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் தேவைப்படாத நிலையை உருவாக்க முடியும் என நம்பியதாகவும் ஷாவுன் ஜாக்‌ஷன் தெரிவித்தார். மேலும் இந்த மருந்து தொடர்பாக முதல் சோதனை வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது 2-ஆம் கட்ட சோதனையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து பேராசிரியர் ஷாவுன் ஜாக்சன் கூறுகையில், ஓரிரு மாதங்களில் இந்த மருந்து உலகம் முழுவதும் கிடைக்கும் என்றும் கொரோனாவை எதிர்கொள்ளும், பலருக்கும் இம்மருந்து உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்