"கல்யாணம் பண்ணிக்கலாமா?".. பரபரப்பா இருந்த நாடாளுமன்றம்.. சட்டுன்னு ப்ரொபோஸ் செஞ்ச MP.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் நாடளுமன்றம் நடைபெற்று கொண்டிருந்த போது எம்பி ஒருவர் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

"கல்யாணம் பண்ணிக்கலாமா?".. பரபரப்பா இருந்த நாடாளுமன்றம்.. சட்டுன்னு ப்ரொபோஸ் செஞ்ச MP.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான்..!

                     Images are subject to © copyright to their respective owners.

காதல்

உலகம் முழுவதிலும் அனைத்து பிரிவினைகளையும் தகர்க்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. இனம், மொழி, மதம், தேசம் என காதல் அத்தனை எல்லைகளையும் கடந்துவிடும். காதலில் இருப்பவர்கள் அதனை வெளிப்படுத்த சரியான தருணத்துக்காக எப்போதும் காத்திருப்பது உண்டு. என்றென்றும் வாழ்வில் நிலைத்திருக்க கூடிய அந்த நிமிடத்தை அழகானதாகவும் தங்களது இணையை கவரும் விதத்திலும் அமைத்துக்கொள்ள பலரும் விருப்பப்படுவது உண்டு. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்பி ஒருவர் நாடாளுமன்றத்திலேயே தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்திருக்கிறார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

நாடாளுமன்ற எம்பி

விக்டோரியா மாகாணத்தை சேர்ந்தவர் நாதன் லாம்பர்ட். தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரான நாதன் அண்மையில் விக்டோரியா மாகாணத்துக்கான எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து நாடளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது முதல் உரையை நிகழ்த்தினார் அவர். தனது பேச்சை முடிக்கும் சமயத்தில் அங்கிருந்த தனது காதலி நோவா எர்லிச்சிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதனால் சற்று நேரம் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிர்ந்து போயினர். பின்னர் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அப்போது பேசிய நாதன்,"நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். ஆனால், நான் மோதிரம் கொண்டுவரவில்லை. அது பத்திரமாக இருக்கிறது. இரவு குழந்தைகள் தூங்கிய பின்னர் அதனை கொண்டுவந்து தருகிறேன்" என தெரிவித்தார்.

கிரீன் சிக்னல்

அப்போது அங்கிருந்த நோவா எர்லிச்சும் நாதனின் காதலை ஏற்றுக்கொள்ள, அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர். கொரோனா சமயத்தில் காதலை வெளிப்படுத்த நினைத்ததாகவும் ஆனால், அப்போது முடியவில்லை எனவும் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாக உணர்வதாகவும் தெரிவித்திருக்கிறார் நாதன்.

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்திரேலியாவில் நாடளுமன்றத்தில் காதலை ப்ரொபோஸ் செய்வது இது முதல்முறை அல்ல. முன்னதாக 2017 ஆம் ஆண்டில், எம்.பி டிம் வில்சன், ஒருபால் திருமணத்தைப் பற்றி உரை நிகழ்த்தும்போது, ​​கேலரியில் இருந்து அதனை பார்த்துக் கொண்டிருந்த தனது பார்ட்னர் ரியான் போல்கருக்கு ப்ரொபோஸ் செய்தார். உடனடியாக போல்கரும் ஏற்றுக்கொண்டார். இது அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற பதிவேட்டில் பதிவும் செய்யப்பட்டது.

AUTRALIA, MP, PROPOSE

மற்ற செய்திகள்