புதையலை தேடி போனவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. செக் பண்ணிட்டு மிரண்டுபோன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் புதையலை தேடி சென்றவருக்கு எக்குத்தப்பாக அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

புதையலை தேடி போனவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. செக் பண்ணிட்டு மிரண்டுபோன அதிகாரிகள்..!

Images are subject to © copyright to their respective owners.

பொதுவாக உலகம் முழுவதிலும் புதையல் குறித்த ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து போன பொருட்களாக இருந்தாலும் சரி, தங்க, வைர சுரங்கங்களாக இருந்தாலும் சரி மக்கள் அதனை தெரிந்துகொள்ளவும், அவற்றை கைப்பற்றவும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இன்று நேற்றல்ல வரலாறு முழுவதும் இப்படியான புதையலை தேடி பல குழுக்கள் சென்றிருக்கின்றன. ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைத்துவிடுதில்லை என்பதே வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தும் பாடம்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புகழ்பெற்ற தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. 1850 களில் இந்த பகுதியில் தங்க தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அதனை வெட்டியெடுக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வந்தனர்.ஆனால், தற்போது அந்த பகுதி கைவிடப்பட்டு காடுகளாக இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இருப்பினும் அங்கே தங்கத்தை தேடி பலரும் படையெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். பாறைகளில் இருக்கும் தங்க தாதுக்களை கண்டறிந்து அவற்றை வெட்டி எடுத்துக்கொண்டு விற்பனை செய்வதே இந்த மக்களின் நோக்கமாகவும் இருக்கிறது. இப்படியானவர்களுக்கு உதவும் வகையில் ‘லக்கி கோல்டு ஸ்டிரைக்' எனும் விற்பனையகம் தங்க தேடுதல் வேட்டைக்கான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதில் மெட்டல் டிடெக்டர்ஸ் எனப்படும் உலோக பொருட்களை கண்டறியும் சாதனமும் ஒன்று.

சமீபத்தில் இங்குள்ள கடையில் இருந்து மெட்டல் டிடெக்ரை வாங்கிச் சென்றிருக்கிறார் உள்ளூர் வாசி ஒருவர். அவர் காட்டுக்குள் வினோதமான மஞ்சள் நிற பாறையை பார்த்திருக்கிறார். அதன் உள்ளே தங்கம் இருக்கலாம் என நம்பிய அவர் அதனை வெட்டியெடுத்துக்கொண்டு ‘லக்கி கோல்டு ஸ்டிரைக் கடைக்கு சென்றிருக்கிறார். அங்கே தங்க தேடலில் 43 வருடம் அனுபவம் வாய்ந்த தரேன் காம்ப் அந்த பாறையை ஆய்வு செய்திருக்கிறார்.

சுமார் 4.6 கிலோ எடைகொண்ட இந்த பாறையில் 2.6 கிலோ எடைகொண்ட தங்கம் இருப்பதை அவர் கண்டறிந்திருக்கிறார். தனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய தங்க கட்டியை ஒரே பாறையில் கண்டதில்லை எனவும் நிச்சயமாக இது பிரம்மாண்ட புதையல் எனவும் கூறியிருக்கிறார் அவர். இதன் மதிப்பு  2.40 லட்சம் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பின்படி ரூ.1.3 கோடி என சொல்லப்படுகிறது.

AUSTRALIA, GOLD

மற்ற செய்திகள்