Map Banner BGMA BGMA Ticket BGM Shortfilm 2019

‘பார்க்கில் சைக்கிளிங் போனவருக்கு’.. ‘ஆங்கிரி பேர்டால் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேகமாக துரத்தி வந்த பறவை தாக்கியதில் சைக்கிள் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

‘பார்க்கில் சைக்கிளிங் போனவருக்கு’.. ‘ஆங்கிரி பேர்டால் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்’..

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், வொல்லொங்கொங்கின் வடக்கு புறநகர்ப் பகுதியான வூனோனாவில் உள்ளது நிக்கல்சன் பூங்கா. இங்கு நேற்று மாலை 73 வயது முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மாக்பி என்ற பறவை வேகமாக அவரைத் துரத்தி வந்து தலையில் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக அருகிலிருந்தவர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய  நாட்டின் முக்கிய பறவையான மாக்பி வசந்த காலத்திலேயே இனப்பெருக்கம் செய்யும். அதன்காரணமாக அந்தப் பறவைகள் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் எனக் கூறப்படுகிறது. மாக்பி பறவை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

AUSTRALIA, CYCLIST, MAGPIE, BIRD, ATTACK, SHOCKING