Viruman Mobiile Logo top

வீட்டு கூரையில் ஒட்டிய ஊறுகாய்.. அப்படியே போட்டோ எடுத்து ஏலத்தில் விட்ட நபர்.. லட்சக்கணக்கில் விலைபோன கலைப்படைப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வீட்டு மேற்கூரையில் ஒட்டிய ஊறுகாயை புகைப்படம் எடுத்து ஏலத்தில் விட்டிருக்கிறார். ஆச்சர்யம் தரும் வகையில் இந்த புகைப்படம் 5 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

வீட்டு கூரையில் ஒட்டிய ஊறுகாய்.. அப்படியே போட்டோ எடுத்து ஏலத்தில் விட்ட நபர்.. லட்சக்கணக்கில் விலைபோன கலைப்படைப்பு..!

Also Read | பிடிச்சு கொடுத்தா 25,000ரூ பணம்.. மொத்த மாநில போலீசும் தேடிய நபர்.. பரபர பின்னணி..!

கலை படைப்புகள் மீதான ஆர்வம் மனிதர்களுக்கு ஆதிகாலம்தொட்டே இருந்து வந்திருக்கிறது. நாளாக நாளாக படைப்புகள் அதிக அர்த்தங்களை உள்ளடக்கியதாக மெருகேறிக்கொண்டே வந்தன. ஒரே படைப்பில் ஏராளமான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதை கலைஞர்கள் சிறப்பு பாணியாக பின்பற்றி வந்தனர். அதன்பின்னர் உலகத்துக்கு தெரிவிக்க விரும்பும் பொருளை மறைமுகமாக தங்களது படைப்புகளில் கொண்டுவருவதை கலைஞர்கள் மேற்கொள்ள துவங்கினார்கள். அப்படித்தான் செய்திருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்திவ் கிரிஃபின் என்பவர்.

Australian Artist Sticks Pickle Onto Ceiling Auctions For Rs 5 lakh

ஊறுகாய்

மக்களின் சகஜமான வாழ்க்கையை கச்சிதமான கோணங்களில் புகைப்படம் எடுப்பதில் இவர் வல்லவர் என்று சொல்கிறார்கள் இவரை பற்றி தெரிந்தவர்கள். அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த படைப்பை உருவாக்க இவர் மேற்கொண்ட செயல்முறைகளையும் இவர் விளக்கியுள்ளார்.

அதாவது, இவர் பிரபல பர்கர் நிலையத்தில் இருந்து சீஸ் பர்கர் ஒன்றை வாங்கியுள்ளார். அதனுடன் வீட்டுக்கு திரும்பிய அவர் பர்கரில் இருந்த ஊறுகாயை (pickle) தனியாக பிரித்து எடுத்து மேலே வீசியிருக்கிறார். அப்போது அது அவரது வீட்டின் மேற்கூரையில் சிக்கியிருக்கிறது. அப்போது அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியிருக்கிறது. அதனை புகைப்படம் எடுத்த மேத்திவ் ஏலத்தில் விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

Australian Artist Sticks Pickle Onto Ceiling Auctions For Rs 5 lakh

ஏலம்

அதன்படி இந்த புகைப்படத்திற்கு 'Pickle 2022' என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஏலத்திற்கு வந்த இந்த புகைப்படம் 4.9 லட்ச ரூபாய்க்கு (10,000 ஆஸ்திரேலிய டாலர்) விற்பனையாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஆக்லாந்தில் உள்ள மைக்கேல் லெட் கலைக்கூடத்தில் இந்த புகைப்படம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த புகைப்படத்தை மைக்கேல் லெட் கலைக்கூடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | சிசிடிவி கேமராவுக்கு முத்தம் கொடுத்துட்டு ஓட்டம் பிடித்த திருடர்கள்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்..!

AUSTRALIAN ARTIST, STICKS, PICKLE, CEILING, AUCTIONS

மற்ற செய்திகள்