குட் நியூஸ்...! 'நாங்க மொதல்ல ஸ்டார்ட் பண்றோம்...' 'ஒரு ஆளுக்கு 2 டோஸ்... ' - ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்வதாக அறிவித்த நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு பல உலக நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டறிய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

குட் நியூஸ்...! 'நாங்க மொதல்ல ஸ்டார்ட் பண்றோம்...' 'ஒரு ஆளுக்கு 2 டோஸ்... ' - ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்வதாக அறிவித்த நாடு...!

தற்போது இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும்,  இரண்டாம் அலைக்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு இங்கிலாந்து அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி ஒன்றை உருவாக்கி மனிதர்களுக்கு செலுத்திய நிலையில் அதன் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

இந்த தடுப்பூசிகள் உலகளவில் மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசியாக கருதப்படுகிறது. தடுப்பூசிக்கு ஒரு நபரின் 2 டோஸ் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரிசோதனை வெற்றியை தொடர்ந்து தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் முதன் முதலாக இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு  உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்ற 2 தடுப்பூசிகளை விட முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்