'16 வருஷம் கழிச்சு கெடச்ச பேக்...' 'கார் டிக்கில வச்சு சுட்ருக்காங்க...' இதன் ஓனர் யார்...? ஹேண்ட் பேக்கின் ஆச்சரியப்பட வைக்கும் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோரி காவல்துறையினர் திருட்டு போன ஒரு கைப்பையை மீட்டுள்ளனர். இதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம் என்னவெனில், அந்த கைப்பை பதினாறு வருடங்களுக்கு முன் தொலைந்து போயுள்ளது.

'16 வருஷம் கழிச்சு கெடச்ச பேக்...' 'கார் டிக்கில வச்சு சுட்ருக்காங்க...' இதன் ஓனர் யார்...? ஹேண்ட் பேக்கின் ஆச்சரியப்பட வைக்கும் பின்னணி...!

இந்த கைப்பை கிராமப்புற நியூ சவுத் வேல்ஸில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பேஷன் பூட்டிக்குகளில் ஒன்றான அஸ்ஸெஃப்பின் கார் பார்க்கில், அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2004 ஜூலையில் ஹெர்பர் மற்றும் ஆபர்ன் தெருவின் அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரின் பின்புறத்திலிருந்து கைப்பை திருடப்பட்டது.

திருட்டுப்போய் சில நாட்கள் கழித்து, மோரி ரயில் நிலையம் அருகே பையினுள் இருந்த சில பொருட்கள் மட்டும் மீட்கப்பட்டன.

இருப்பினும், கைப்பை மற்றும் அதனுள் பெரும்பாலான பொருட்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸெப்பின் கார் பார்க்கில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மோரி காவல்துறை பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பர்க் கூறியபோது,

"இந்த கைப்பையின் அம்சங்கள் 2004-ம் ஆண்டில் திருடப்பட்ட கைப்பைய் என்பதை உறுதி செய்துள்ளோம். சிறிய திருட்டாக இருந்தாலும் அதை புகார் அளிக்க வேண்டியது அவசியம், அப்படி செய்தால் அவற்றை மீண்டும் கண்டுபிடித்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் காலம் தாழ்ந்தாலும் உள்ளது என்பதை இது காட்டுகிறது என்றார்.

எனினும் 2004-ல் கைப்பை திருட்டுப் போனதாக புகாரளித்த உரிமையாளர் தற்போது எங்குள்ளது என்பதை தெரியாத நிலையில், போலீசார் கைப்பையின் உரிமையாளரை அணுகவும் தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்