"இவரைப் பத்தி ஒரே ஒரு தகவல்.. ₹5 கோடி கொடுக்க ரெடி".. ஆஸ்திரேலிய போலீசால் வலைவீசி தேடப்படும் இந்தியர்.. உறையவைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் இந்தியரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானமாக அளிக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை அறிவித்திருக்கிறது.
Also Read | என்னிடம் வராதீர்கள் தம்பிகளே.. லீவு குறித்து தமிழ்நாடு வெதர்மேனிடம் கேட்கும் 2K கிட்ஸ்.. பாவம்யா மனுஷன்..!😅
ஆஸ்திரேலியாவின் குயின்சிலாந்து பகுதியை சேர்ந்தவர் டோயா கார்டிங்லி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி அங்குள்ள வாங்கட்டி கடற்கரையில் தனது நாயுடன் வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை கொலை செய்தது Innisfail இல் செவிலியராக பணிபுரிந்த 38 வயதான ராஜ்விந்தர் சிங் என காவல்துறையினர் சந்தேகித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் டோயா கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களில் ராஜ்விந்தர் சிங் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்தடைந்திருக்கிறார்.
மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் ஆஸ்திரேலியாவிலேயே விட்டுவிட்டு சிங் இந்தியா வந்துவிட்டதாக காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனிடையே அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் சென்றபோது அவர் வேலையை விட்டுவிட்டு அவசரகதியில் நின்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து ராஜ்விந்தர் சிங்கை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதன் ஒருபகுதியாக பொதுமக்களிடம் இருந்து அவர் குறித்த தகவல்களை பெறும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றையும் குயின்ஸ்லாந்து காவல்துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ராஜ்விந்தர் சிங் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இவ்வளவு பெரிய சன்மானத்தொகை வேறு எந்த வழக்கிலும் வழங்கப்பட்டதில்லை என்கிறார்கள் காவல்துறையினர்.
இதுபற்றி பேசிய துப்பறியும் பிரிவு கண்காணிப்பாளர் சோனியா ஸ்மித்,"இந்த சன்மானத்தொகை தனித்துவம் வாய்ந்தது. டோயா கொலை செய்யப்பட்ட மறுநாளான அக்டோபர் 22ஆம் தேதி சிங் இங்கிருந்து புறப்பட்டு 23ஆம் தேதி சிட்னியிலிருந்து இந்தியாவுக்குப் சென்றார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் இந்தியா சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய பூர்வீகம் பஞ்சாபில் உள்ள பட்டர் காலன் ஆகும். அவரை பற்றி இந்தியர்களும் வாட்சப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்திருக்கிறது. உள்ளூரிலும் ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்த அதிகாரிகளின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
Also Read | என்னப்பா Reels-ஆ.. எனக்கும் காட்டு.. பாகனிடம் அடம்பிடித்த யானை.. செம்ம கியூட்டான வீடியோ..!
மற்ற செய்திகள்