'டெலிவரி ஆன உணவுடன் இருந்த துண்டு பேப்பர்...' - 'அத' படிச்சிட்டு 'ரிவியூ'ல என்ன எழுதினாரு தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் சாப்பிடுவதற்காக ஃபெட்டூசின் கார்பனாரா பாஸ்தா என்கிற உணவை அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார்.

'டெலிவரி ஆன உணவுடன் இருந்த துண்டு பேப்பர்...' - 'அத' படிச்சிட்டு 'ரிவியூ'ல என்ன எழுதினாரு தெரியுமா...?

அவருக்கு காய்ச்சல் இருந்த காரணத்தினால் ஓய்வெடுத்த பிறகு அவர் தாமதாக எழுந்துள்ளார். எனவே அந்த ஹோட்டல் மூடுவதற்கு சில நேரம் முன்பு தான் அவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். வெறும் ஆர்டருடன் நிறுத்தாமல், ஒரு மெசேஜையும் அந்த ஹோட்டலுக்கு சேர்த்து அனுப்பியுள்ளார்.

அந்த மெசேஜில், "என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தூங்கிவிட்டேன். எனவே உங்களிடம் தாமதமாக ஆர்டர் செய்துள்ளேன். ஒருவேளை நீங்கள் ஹோட்டலை மூடப் போகும் நேரம் வந்துவிட்டால் என்னுடைய ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள்" என அவர் மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த ஹோட்டலில் பணிபுரிபவர்கள் இதை படித்துவிட்டு அவர் ஆர்டர் செய்த பாஸ்தாவுடன், இலவசமாக கார்லிக் பிரட்டை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அவருக்கு ஒரு சிறிய குறிப்பு ஒன்றை பேப்பரில் எழுதி அந்த ஆர்டருடன் சேர்த்து அனுப்பியுள்ளனர். அந்த குறிப்பில் "உங்களின் அன்பான குறிப்புக்கு நன்றி, தாமதமாக ஆர்டர் செய்ததை நினைத்து வருந்தாதீர்கள், நாங்கள் அதற்காக கவலைப்படவில்லை. நீங்கள் கொஞ்சம் நன்றாக உணர உங்களுக்காக கார்லிக் பிரட்டை இதில் இலவசமாக வைத்துள்ளோம். உங்களைப் போன்றோரின் அன்பான மெசேஜ்கள் எங்களின் நல்ல நாளாக மாறுகின்றன. நன்றி." என்று அந்த சிறிய குறிப்பில் உணவகத்தில் பணிபுரியும் சர்வர் எழுதி அனுப்பியுள்ளார்.

இதை அந்த நபர் படித்து நெகிழ்ந்து போயுள்ளார். மனம் குளிர்ந்து போய் உடனே உணவகத்திற்கு கூகுளில் சென்று 5 ஸ்டார் ரேட்டிங் தந்துள்ளார். மேலும் அதில், "இவர்கள் எனக்காக நான் உடல்நிலை சரியில்லாத போது என் வீட்டிற்கு கார்லிக் பிரட்டை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர். கூடுதலாக ஒரு அன்பு குறிப்பையும் இணைத்துள்ளனர்.

இதை வாசித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஒவ்வொரு நபரின் நெற்றியிலும் எனக்கு முத்தம் கொடுத்தாக வேண்டும் போன்று இருந்தது. மேலும் எனக்காக இவர்கள் கார்பனாரா பாஸ்தாவின் மீது சீஸை வேகவைத்து சேர்த்துள்ளனர்.

இது மிகவும் சுவையாகவும் இருந்தது. எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. இந்த அரசர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்" என review கொடுத்துள்ளார்.

இதை கண்ட அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர்ரெட்டிட் சமூக ஊடகத்தில் அவரின் அந்த ரிவியூவை குறிப்பிட்டு பதிவு ஒன்றை எழுதியுள்ளனர். "இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களின் கடையை மூடுவதற்கு 14 நிமிடங்கள் இருக்கும் முன்பு ஒருவர் உணவை ஆர்டர் செய்தார். அத்துடன் அவர் கனிவான ஒரு மெசேஜை குறிப்பிட்டிருந்தார். நாங்கள் அதை படித்திவிட்டு அவருக்கு ஒரு சிறிய குறிப்பு எழுதினோம் மற்றும் கார்லிக் பிரட்டை இலவசமாக அனுப்பினோம்.

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் அவர் எங்களை பற்றி குறிப்பிட்ட இந்த அன்பான ரிவியூவை பார்த்தேன். எங்களை இது மிகுந்த உற்சாகம் ஆக்கி விட்டது" என்று அங்கு பணிபுரியும் நபர் ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார்.

AUSTRALIA, GARLIC BREAD, SWEET NOTE

மற்ற செய்திகள்