"அடையாளம் தெரியாதவங்க வேலை இது.. ரொம்ப அட்வான்ஸா பண்ணியிருக்காங்க!" .. கொதித்தெழுந்த பிரதமர்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியா மீது மிகப்பெரிய அளவில் நவீன முறையிலான சைபர் தாக்குதல் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்காட் மாரிசன் அடையாளம் தெரியாதவர்களால் நவீன முறையில் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், ஆஸ்திரேலியா மற்றும் மாநில அரசின் இணைய தளங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசியல் கட்சிகள், கல்வி, ஆரோக்கியம் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் இணையதளங்களின் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிட்-19 விவகாரத்தில் சீனா மீதான சர்வதேச விசாரணை அவசியம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சி மற்றும் பார்லி அரிசி மீது சீன அரசு கட்டுப்பாடு விதித்தது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்த சீன அரசு பார்லி அரிசி மீது அதிக வரியையும் விதித்தது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் தங்கிப்படிக்கும் தெற்காசிய நாடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய இனவெறி தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் சுற்றுலா பயணிகள் யாரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பனிப் போர் நிலைகொண்டிருந்த சூழலில் ஆஸ்திரேலியா மீது நடத்தப்படும் இத்தகைய சைபர் தாக்குதல் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு முன்பு இந்தியாவில் சீன ராணுவத்தின் இணையதள போர் பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சைபர் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் குறித்த பேட்டியின்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், “சைபர் தாக்குதல் அதிநவீன முறையில் தொடுக்கப்படுகிறது” என்றும், ஒவ்வொரு மாநில அளவிலும் வர்த்தகத்தை முடக்கும் நோக்கிலான சைபர் தாக்குதல் கணிசமான அளவில் அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.
மற்ற செய்திகள்