"கொரோனா தடுப்பு மருந்து மட்டும் ரெடி ஆகட்டும்"... நம்ம மக்கள் எல்லாருக்கும் 'free' தான்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட 'பிரதமர்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதையும் கொரோனா தொற்று கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்த கொடிய வைரசிற்கான தொற்று மருந்தை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் உள்ளது.

"கொரோனா தடுப்பு மருந்து மட்டும் ரெடி ஆகட்டும்"... நம்ம மக்கள் எல்லாருக்கும் 'free' தான்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட 'பிரதமர்'!!!

ரஷ்யாவின் தடுப்பு மருந்து இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ள நிலையில், இந்தியா உட்பட மேலும் பல நாடுகள் உருவாகியுள்ள தடுப்பு மருந்துகளும் சோதனை கட்டங்களில் உள்ளன. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் ஆஸ்திரேலிய மக்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராசெனேக்கா என்னும் நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரித்து வரும் நிலையில், அதனுடன் ஆஸ்திரேலிய அரசு ஒரு உடன்பாடு செய்துள்ளது.

அந்த தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் நாட்டு மக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். உலகளவில், கொரோனா தொற்றுக்கு எதிரான 5 தடுப்பு மருந்து சோதனைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து முடிவுகள் இந்தாண்டு இறுதிக்குள் தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

மற்ற செய்திகள்