Video : "ஆத்தி... எப்டி எல்லாம் யோசிச்சு 'propose' பண்றாங்க!!... நோட் பண்ணுங்க மக்களே..." காதலனின் அசத்தல் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போன 'காதலி'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, தங்களது காதலர்கள் மற்றொருவரிடம் தங்களின் காதலை வெளிப்படுத்துவது என்பது எப்போதும் புதுமையாகவும், எதிர்பாராமலும் இருக்க வேண்டும் என்பதைத் தான் பெரும்பாலும் விரும்புவார்கள்.

Video : "ஆத்தி... எப்டி எல்லாம் யோசிச்சு 'propose' பண்றாங்க!!... நோட் பண்ணுங்க மக்களே..." காதலனின் அசத்தல் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போன 'காதலி'!!!

அப்படி எதிர்பாராத சமயத்தில் தன்னிடம் ஒருவர் வெளிப்படுத்தும் காதலை உணரும் யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் திகைத்து, மெய் சிலிர்த்து தான் போவார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

அங்கிருந்த மைதானம் ஒன்றில் பொது மக்கள் சுற்றி உட்கார்ந்திருந்த நிலையில், நடுவே பூங்காவிலுள்ள பெண் பயிற்சியாளர் ஒருவர், கொக்காட்டூ (cockatoo) என்ற வகை கிளியைக் கொண்டு வந்து, அங்கு சூழ்ந்திருந்த மக்களிடம், 'இங்குள்ள யாருக்கு இந்த கிளியை அருகே வைத்து சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?' என்ற கேள்வியை எழுப்பினார்.

அப்போது, அங்கிருந்த பல பேர் கை உயர்த்த, நீல நிற ஜீன்ஸ் உடை அணிந்திருந்த பெண் ஒருவரை பயிற்சியாளர் தேர்வு செய்தார். அப்போது, அங்கிருந்து பறந்து சென்ற கிளி, பெண்ணின் கையில் சிறிய காகித துண்டை அளித்து விட்டு மீண்டும் பறந்து பயிற்சியாளரிடம் வந்தது. அந்த காகிதத்தை பெண் திறந்து படிக்க ஆரம்பித்த மறுகணமே, அருகில் அவருடன் வந்திருந்த ஆண் நண்பர் ஒருவர், தனது காதலை மோதிரம் ஒன்றைக் கொடுத்து வெளிப்படுத்தினார். 

 

அந்த காகிதத்தில் தனது காதலையே அருகிலிருந்த காதலர் வெளிப்படுத்தியுள்ளார். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் திக்கு முக்காடிப் போன பெண், மறுகணமே காதலையும் ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோவை அந்த உயிரியல் பூங்கா தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, சில மணித்துளிகளிலேயே அதிக லைக்குகளை அள்ளியது. காதல் ஜோடி ஒன்றிற்கு கிளி ஒன்று தூதாக இருந்தது தொடர்பான வீடியோ நெட்டிசன்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்