Veetla Vishesham Mob Others Page USA

Push Up-ல் புதிய உலக சாதனை.. யம்மாடி ஒரு மணி நேரத்துல இவ்வளவா? கின்னஸ் சாதனை படைத்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவை சேர்ந்த தடகள வீரர் ஒருவர் ஒரு மணிநேரத்தில் அதிக புஷ்-அப் செய்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

Push Up-ல் புதிய உலக சாதனை.. யம்மாடி ஒரு மணி நேரத்துல இவ்வளவா? கின்னஸ் சாதனை படைத்த வீரர்..!

Also Read | "ஒரு செகண்ட்-ல பூமிய விழுங்கிடும்..நெனச்சத விட 500 மடங்கு பெருசு".. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய Black Hole.. திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!

உலகம் முழுவதும் வித்தியாசமான சாதனைகள் மற்றும் நிகழ்வுகளை கண்டறிந்து கவுரவித்து வருகிறது கின்னஸ் நிர்வாகம். அந்த வகையில் ஆஸ்திலரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சான்றிதழ் அளித்திருக்கிறது கின்னஸ் அமைப்பு. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டேனியல் ஸ்கெலி. தடகள வீரரான இவர், ஒரு மணி நேரத்தில் 3,182 புஷ் - அப் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு மணிநேரத்தில் 3,054 புஷ் - அப்களை எடுத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாராட் யங் என்னும் வீரர் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் யங்-கின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார் டேனியல். ஆனால், இதற்காக அவர் கடந்து வந்த பாதை மிகவும் வலி நிறைந்ததாகும். டேனியல் தனது 12 ஆம் வயதில் ஒரு விபத்தை சந்தித்திருக்கிறார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன்பிறகு சிகிச்சைகள் மூலமாக டேனியல் குணமடைந்தாலும் அவருக்கு CRPS (complex regional pain syndrome) எனப்படும் வலி நோய் தாக்கியிருக்கிறது.

வலி நிறைந்த வாழ்க்கை

சாதாரணமாக பேசும்போது கூட, வலியை ஏற்படுத்தக்கூடிய இந்த நோயுடன் போராடி வந்த டேனியல் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சி செய்து வந்திருக்கிறார். தனக்கு ஏற்பட்ட நோய் தாக்குதல் காரணமாக, பல மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய சூழல் ஏற்பட்டது. சில நேரங்களில் இடது கையில் ஏற்பட்ட வலியினால் அவருக்கு மயக்க ஊசிகளையும் மருத்துவர்கள் அளித்துள்ளனர்.

Athlete Breaks Guinness Record With 3182 Push Ups In An Hour

பயிற்சி

இத்தனை வலிகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியை மட்டும் டேனியல் கைவிடவே இல்லை. தினந்தோறும் கடுமையாக பயிற்சி எடுத்துவந்த டேனியல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது முதல் கின்னஸ் சாதனையை படைத்தார். அதனை தற்போது அவரே முறியடித்து புதிய உலக சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

இதுமட்டும் அல்லாமல் அதிக நேரம் பிளாங் (plank) செய்தும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் டேனியல். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 9 மணி நேரம் 30நிமிடங்கள் 1 வினாடிகளுக்கு பிளாங் செய்திருக்கிறார் இவர்.

Also Read | "இதெல்லாம் இந்தியாவுல தான் நடக்கும்"..லைட், மியூசிக் எல்லாம் ஸ்கூட்டர்ல.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் வீடியோ..!

PUSH UPS, ATHLETE, ATHLETE BREAKS GUINNESS RECORD, கின்னஸ் சாதனை, புஷ்-அப், தடகள வீரர்

மற்ற செய்திகள்