'ஏற்கெனவே கொரோனா கட்டுக்கடங்காம பரவிட்டு இருக்கு'... 'இது இன்னும் ஆபத்தாகிடும்'...' திடீர் முடிவால் அதிர்ச்சி கொடுத்துள்ள அமெரிக்கா!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

'ஏற்கெனவே கொரோனா கட்டுக்கடங்காம பரவிட்டு இருக்கு'... 'இது இன்னும் ஆபத்தாகிடும்'...' திடீர் முடிவால் அதிர்ச்சி கொடுத்துள்ள அமெரிக்கா!'...

கடந்த சில மாதங்களாக உலகையே புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் இன்னும் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத சூழலே பல நாடுகளிலும் உள்ளது. முன்னதாக வைரஸ் பரவலை தடுக்க ஏராளமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டுமென பல நாடுகளிலும் அறிவுறுத்தப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தாலே பரிசோதனை செய்துகொள்ளும்படி கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது திடீரென கொரோனா பாதித்தவருடன் 6 அடி நெருக்கத்தில் 15 நிமிடத்திற்கு தொடர்பில் இருந்தபின்னும் கொரோனா அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள தேவையில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. .

இதற்கிடையே அமெரிக்காவில் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்படுவதாலேயே கொரோனாவை அமெரிக்கா சரியாக கையாளவில்லை என போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக கூறி, பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனால் ட்ரம்பின் அரசியல் தலையீட்டாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டு மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும், வல்லுநர்களுடைய கருத்துகளை கேட்ட பிறகே நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி பிரெட் கிராய்ர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்