'இவர்களாலேயே கொரோனா முடிவுக்கு வரும்'... 'இதுவும் நல்லதுதான்'... 'ஆய்வாளர்கள் கூறும் குட் நியூஸ்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அறிகுறிகளே இல்லாத நோயாளிகளால் கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என தொற்றுநோயியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதன்முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி அனைவரையும் முடக்கிப்போட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 40 சதவீதத்தினருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நோயாளிகளுக்கு உடலில் ஏற்கெனவே வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கலாம் எனவ ஆய்வாளர்கள் பலரும் தங்களுடைய சந்தேகத்தை கூறிவருகின்றனர். மேலும் சில இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 80% முதல் 95% சதவீதத்தினருக்கு அறிகுறிகளே இருப்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற அறிகுறிகளே இல்லாத நோயாளிகளால் கொரோனா எளிதாக பரவலாம் என அரசுகள் அச்சம் கொண்டுள்ள நிலையில், அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது நல்லதுதான் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்று நோயியல் வல்லுநர் மோனிகா காந்தி கூறியுள்ளார்.
மேலும் அறிகுறிகள் இல்லாத நபர்களிடம் ஏற்கெனவே பாதி எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என சந்தேகிக்கும் ஆய்வாளர்கள் இதனால்தான் பல நோயாளிகள் மோசமாக பாதிக்கப்படாமல் தப்புவதாகவும், நோய் குறித்த நினைவுகளை சேமித்து வைத்திருந்து நோய் திரும்பத் தாக்கும்போது முன்பை விட தீவிரமாக நோய் எதிர்ப்பு சக்தி சண்டையிடும் எனவும் கூறியுள்ளனர்.
எனவே அறிகுறிகளே இல்லாமல் அதிக நோயாளிகள் பாதிக்கப்படுவது ஒரு வகையில் நல்லதுதான் எனவும், இவ்வகை நோயாளிகளால் மக்கள் தொகையில் அதிகமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் எனவும், அதன் விளைவாக கொரோனா பரவல் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் தொற்று நோயியல் வல்லுநர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்