விண்வெளி வரலாற்றுல இப்படி ஒரு ரிஸ்க்-அ யாரும் எடுத்ததில்லை.. செம்ம தில்லுப்பா இவருக்கு.. நாசா பகிர்ந்த வைரல் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பாதுகாப்பு வசதிகள் இன்றி வீரர் ஒருவர் விண்வெளியில் பறந்து சாதனை படைத்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | லண்டனுக்கு செல்லும் இந்திய அணியின் விமானத்தை தவற விட்ட அஸ்வின்.. இது தான் காரணமா? முழு தகவல்
மனிதகுலம் அறிவியல் துறையில் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தி இருந்தாலும், விண்வெளி குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் நம்மால் பதிலளிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே பல மில்லியன் டாலர் செலவில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன உலக நாடுகள். நாள்தோறும் விண்வெளி பற்றிய புதிய புதிய தகவல்கள் நமக்கு கிடைப்பது இந்த ஆராய்ச்சிகளின் பலனாகத்தான். அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளி ஆய்வில் பல முத்திரைகளை பதித்திருக்கிறது. இந்நிலையில், நாசா பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வியக்கவைக்கும் புகைப்படம்
நாசா இதுபோன்ற ஆச்சர்யமளிக்கும் புகைப்படங்களை வெளியிடுவது இது முதன்முறையல்ல. சமீபத்தில் கருந்துளை அதன் அருகில் இருக்கும் பொருட்களின் மீது எவ்வாறு ஈர்ப்பு விசை மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இது இணையம் முழுவதும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த வீரர் ஒருவர் விண்வெளியில் பயணிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசா.
முதன்முறையாக
விண்வெளி வீரர் புரூஸ் மெக்கன்ட்லெஸ் II, தனது விண்கலத்தின் பாதுகாப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைக்கப்படாமல் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசா. இது போன்று விண்வெளி வரலாற்றில் வேறு எவரும் செய்ததில்லை எனத் தெரிவித்திருக்கிறது நாசா.
ட்விட்டரில் கியூரியாசிட்டி என்னும் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில்," விண்வெளியில் எடுக்கப்பட்ட மிகவும் பயங்கரமான புகைப்படமாக இது இருக்கலாம். விண்வெளியில் இதுபோன்ற சாகசத்தில் வேறு யாரும் ஈடுட்டதில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்வெளியில் மிதக்கும் வீரரின் புகைப்படத்தை இதுவரையில் 1.61 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும், 21,000 பேர் இந்த புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்