"அதெப்படி என்ன பாத்து அப்படி சொன்னீங்க?".. 'மல்லுக்கட்டிய 'பெண் நிரூபர்'!.. 'சூடான' டிரம்ப் 'பிரஸ் மீட்டில்' செய்த 'காரியம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald J Trump) பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிரூபருக்கு அளித்த பதிலும், அவர் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்துகொண்ட விதமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"அதெப்படி என்ன பாத்து அப்படி சொன்னீங்க?".. 'மல்லுக்கட்டிய 'பெண் நிரூபர்'!.. 'சூடான' டிரம்ப் 'பிரஸ் மீட்டில்' செய்த 'காரியம்'!

அதில், டிரம்பிடம் கேள்வி கேட்ட,  பிரபல பத்திரிகையைச் சேர்ந்த பெண் நிரூபர் வெய்ஜியா ஜியாங் ( Weijia Jiang) என்பவர் “மற்ற நாடுகளை விடவும் அமெரிக்கா கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறீர்கள். பிறகு ஏன் அமெரிக்கா எங்கும் கொரோனாவால் உண்டாகும் உயிரிழப்பு மற்றைய நாடுகளை விடவும் நாளுக்கு நாள் கவலைக்குரிய வகையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது?” என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், “கொரோனாவால் அமெரிக்காவில் மக்கள் உயிரை இழந்துகொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அந்த கேள்வியை நீங்கள் சீனாவிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்காதீர்கள். சீனாவிடம் அந்த கேள்வியைக் கேளுங்கள் நீங்கள் கேட்பதாக இருந்தால்” என்று கூறிவிட்டு, அவருக்கு பின்னால் இருந்த சிஎன்என் பத்திரிகையைச் சேர்ந்த மற்றொரு பெண் நிரூபருக்கு வாய்ப்பு கொடுப்பதாக கை காட்டினார்.

ஆனால், இதனிடையே மீண்டும் வெய்ஜியா ஜியாங், “சார்.. எதுக்காக எனக்கு இப்படி பதில் அளிக்கிறீங்க? நான் ஒரு ஆசிய - அமெரிக்க பெண் என்பதாலா?” என்று கேட்க, அதற்கு பதில் கூறிய டிரம்ப், “நான் யாராக இருந்தாலும் பதிலைக் கூறுகிறேன்!” என்று கூறினார். இதனிடைடே தற்போது டிரம்ப் வாய்ப்பு கொடுத்த சிஎன்என் பத்திரிகையை சேர்ந்த பெண்ணையும் தவிர்துவிட்டு அடுத்த நிரூபருக்கு சிக்னல் காட்டினார். ஆனால் சிஎன்என் பெண் நிரூபர், “சார், என்னைதான் அடுத்து கேள்வி கேட்க அனுமதித்தீர்கள்!” என்று கூற, “நான் உங்களுக்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்தேன்.. நீங்கள்தான் கேள்வி கேட்கவில்லை. வேறு யாரேனும்? ஓகே.. அனைவருக்கும் நன்றி” என்று பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டார்.

வெய்ஜியா ஜியாங் இரண்டாவது முறை தன்னைப் பற்றிய கேள்வியை டிரம்பிடம் கேட்டுக் கொண்டிருந்ததால் சிஎன்என் பத்திரிகையைச் சேர்ந்த பெண் நிரூபர் சற்று அமைதி காத்தார். ஆனால் அவருக்கு டிரம்ப் ரெஸ்பான்ஸ் செய்து சில விநாடிகள் ஆகிவிட்டன என்பதால், டென்ஷனான டிரம்ப் அனைத்தையும் தவிர்த்துவிட்டு பிரஸ் மீட்டுக்கு முழுக்கு போட்டுவிட்டு புறப்பட்டார்.