தினமும் 'நரக' வேதனையா இருக்கு...! 'ஒருவேளை நான் அப்படி பண்ணாம இருந்திருந்தா...' 'கண்டிப்பா அன்னைக்கு...' - அஷ்ரஃப் கனி பகிர்ந்துள்ள 'பகீர்' அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தான் மக்களை இக்கட்டான நிலைமைக்கு விட்டுச் சென்றதற்கு, தன்னை மன்னித்து விடும்படி, அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தனர். இதையடுத்து ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தலைநகர் காபூல் நகரை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோது, அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி, விமானம் மூலம் தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
தற்சமயம் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆப்கானில், சர்வதேச பயங்கரவாதி முல்லா ஹசன் அகுந்த் தலைமையில், தாலிபான்கள் அரசு அமைத்துள்ளனர். துணை பிரதமராக முல்லா அப்துல் கனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ட்விட்டரில், அஷ்ரஃப் கனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மக்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டதை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன். அதற்காக ஆப்கானிஸ்தான் மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மக்களுக்கான அர்ப்பணிப்பு ஒருபோதும் மாறவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் இயலவில்லை.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய போது, அங்கிருந்து வெளியேறியதற்காக நான் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதிபர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதனால் நான் நாட்டை விட்டு வெளியேறினேன். அப்படி நான் வெளியேறாமல் இருந்திருந்தால், 90களில் எப்படி போர்க்களமாக மாறியதோ அதுபோன்று காபூல் மாறியிருக்கும். கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கான் மக்கள் செய்து வரும் தியாகத்திற்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்ற செய்திகள்