செருப்பு போடுறதுக்கு கூட 'டைம்' இல்ல...! 'நாலஞ்சு பேரு உள்ள வந்து என்ன தேடினாங்க...' 'கண்ண மூடி திறக்குறதுக்குள்ள...' அன்று என்ன நடந்தது...? - அதிர வைத்த 'திக்திக்' நொடிகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் ராணுவத்திற்கும் தாலிபானுக்கும் நடைபெற்ற உள்நாட்டு போர் உலகறிந்தது. தற்போது தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி யாருக்கும் தெரியாமல், ஆப்கானை விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடினார்.
கட்டுகாட்டாக பணத்தை எடுத்துச் சென்றதாக செய்திகளும் வெளியாகின. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மக்களை விட்டு அதிபர் மட்டும் தப்பித்து ஓடிய இந்த சம்பவம் பெரும் அதிச்சியையும், பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களையும் கிளப்பியது.
ஆப்கானில் இருந்து தப்பி சென்ற அஷ்ரப் கனி தற்போது குடும்பத்துடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அஷ்ரப் கனி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 'அதிபர் மாளிகைக்குள் திடீரென உள்ளூர் மொழி பேசத்தெரியாத நபர்கள் நுழைந்து என்னை தேடினர். நான் எனது காலணிகளை கூட அணிய முடியாத சூழ்நிலையில் தான் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டேன். ஏராளமான பணத்தை எடுத்துக் கொண்டு சென்றேன் என வெளியாகியுள்ள செய்தி உண்மை அல்ல.
கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து கலந்து ஆலோசிக்க நான் நினைத்தேன், ஆதரவும் அளித்தேன்.
நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்