'இந்த பையன நியாபகம் இருக்கா'?... 'புதிய போட்டோவை வெளியிட்டு 'ஷாக்குக்கே ஷாக்' கொடுத்த சிறுவன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆர்ய பெர்மனா, (Arya Permana) இந்த சிறுவனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. தன்னுடைய 11 வயதில் 190 கிலோ இருந்த சிறுவன், உலகிலேயே அதிக ஏடை கொண்ட சிறுவனாக அறியபட்ட இந்தோனேசியாவை சேர்ந்த அந்த சிறுவன் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளான்.

'இந்த பையன நியாபகம் இருக்கா'?... 'புதிய போட்டோவை வெளியிட்டு 'ஷாக்குக்கே ஷாக்' கொடுத்த சிறுவன்!

அதிக எடையின் காரணமாக தன்னுடைய அன்றாட பணிகளை செய்வதற்கே மிகவும் சிரமப்பட்ட அந்த சிறுவன், தன்னுடைய வீட்டின் கழிப்பறையை கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான். நூடுல்ஸ், எண்ணையில் பொரித்த உணவுகள், மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் அவனுடைய எடை தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றது. இப்படியே சென்றால் மகனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த பெர்மனாவின் பெற்றோர், மருத்துவரை அணுகி ஆலோசித்தனர்.

மருத்துவர் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிய நிலையில், அதனால் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து முதலில் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். பின்னர் மருத்துவர் எடுத்து கூறிய நிலையில், அறுவை சிகிச்சைக்கு சிறுவனின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

தற்போது ஆர்ய பெர்மனா ஆளே மாறி பார்ப்பதற்கே புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முன்பு தினமும் இரண்டு பிளேட்டில் சாப்பிட்டு வந்த ஆர்ய பெர்மனா, தற்போது 7 ஸ்பூன் அளவிற்கே தினமும் உணவு எடுத்து கொள்ள முடிகிறது.

190 கிலோவில் இருந்து 101 கிலோவிற்கு வந்துள்ள ஆர்ய பெர்மனா பேசும்போது, ''எடை குறைப்பிற்கு பின்பு என்னால் பள்ளிக்கு செல்ல முடிகிறது. நண்பர்களுடன் கால்பந்து விளையாட முடியும். இன்னும் என்னால் வேகமாக இயங்க முடியவில்லை என்றாலும் நிச்சயம், ஒரு நாள் பெரிய கால்பந்து வீரனாக வருவேன்'' என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். 

அறுவை சிகிச்சையால் ஆர்ய பெர்மனாவின் தோல்கள் சுருங்கி தொங்கிய நிலையில் இருந்த போதும், நம்பிக்கையுடன் என்னால் சாதிக்க முடியும் என கூறும் ஆர்ய பெர்மனாவின் வார்த்தைகள் நமக்கும் ஒரு உற்சாக டானிக் தான். !

ARYA PERMANA, INDONESIA