'பங்கு நானும் ஒருக்கா'... 'எப்படி இந்த நேரத்திலும் இத பண்ண முடியுது'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூலில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பொம்பை மின்சார கார்கள் தாலிபான்கள் கைகளில் சிக்கியது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தாலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தாலிபான்கள் ஆப்கானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், நாடு முழுவதுக்கும் பொது மன்னிப்பை அறிவித்துள்ளார்கள்.
மேலும், பெண்களும் புதிய ஆட்சியில் பங்கேற்கலாம் என தாலிபான்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு அவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. இதற்கிடையே காபூலில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பொம்பை மின்சார கார்களில் தாலிபான்கள் விளையாடிய காட்சி வைரலாகி வருகின்றது.
பத்திரிகையாளர் ஹமித் ஷாலிசி தனது ட்விட்டர் பக்கத்தில் காபூலில் உள்ள பொழுது போக்கு பூங்காவில், பொம்மை மின்சார கார்களில் தாலிபான்கள் விளையாடும் காட்சியைப் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நாட்டு மக்கள் அடுத்து என்ன நடக்குமோ என தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உங்களால் மட்டும் எப்படி நெஞ்சில் சிறிதளவு ஈரம் கூட இல்லாமல் இப்படி இருக்க முடிகிறது என தங்களது ஆதங்கத்தைக் கொட்டி வருகிறார்கள்.
பல செய்தி நிறுவனங்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நிலையில் இதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.
🇦🇫 #Afghanistan : les #talibans ont pris le contrôle d’un parc d’attractions à #Kaboul. (témoins) pic.twitter.com/BukACDf5v2
— Mediavenir (@Mediavenir) August 16, 2021
மற்ற செய்திகள்