20 கோடி பேர்ல ஒருத்தருக்கு தான் இந்த பிரச்சனை.. "தண்ணி'ய பாத்ததும் நான் படுற பாடு இருக்கே.."
முகப்பு > செய்திகள் > உலகம்"நீரின்றி அமையாது உலகு" என ஒரு வாக்கியமுண்டு. அந்த கூற்றுப்படி, இந்த உலகில் அதிக இடங்களை நீர் தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது.
Also Read | “இது நம்ம நாட்டுக்குள்ளையும் நுழைஞ்சிருச்சு”.. பரபரப்பு தகவலை வெளியிட்ட வடகொரிய அதிபர்..!
அதே போல, உலகில் வாழும் மனிதர்கள் கூட தங்களின் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அதிக நீரை பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.
குடிப்பதற்கும், குளிப்பதற்கும் என இப்படி பல பயன்பாட்டிற்கு நீர் மனிதனுக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
தண்ணீர் நமக்கு ஆகாது..
அப்படி ஒரு நிலையில், 15 வயதே ஆகும் பெண் ஒருவருக்கு வந்துள்ள நோய் தொடர்பான செய்தி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிசோனா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அபிகைல் பெக் (Abigail Beck). இந்த மாணவிக்கு, Aquagenic Urticaria என்ற அரிய நோய் ஒன்று உள்ளது. 200 மில்லியன் மக்களில் ஒருவரை பாதிக்கும் இந்த அரிய நோயால், தண்ணீர் உடம்பில் படும் போது, ஒருவித எரிச்சல் ஏற்படும் என கூறப்படுகிறது.
ஒரு வருஷம் ஆச்சு..
அபிகைல் பெக் உடலில் மழைநீர் படும் போதோ, அல்லது குளிக்கும் போதோ, தண்ணீர் படுவது ஆசிட் போன்ற உணர்வை தருவதாக தெரிவித்துள்ளார். இதனால், இரண்டு தினங்களுக்கு ஒரு முறை தான் அபிகைல் குளிக்கவும் செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, ஒரு க்ளாஸ் தண்ணீர் கூட அபிகைல் குடித்ததில்லை. இதற்கு பதிலாக, எனெர்ஜி டிரிங்க்ஸ், மாதுளை ஜூஸ் என தண்ணீர் அளவு குறைவாக இருக்கும் பொருட்களை எடுத்து வருகிறார்.
தன்னுடைய 13 வயதில், தண்ணீர் காரணமாக ஒரு அலர்ஜி இருப்பதை அபிகைல் உணர்ந்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த நோய்க்கு சுமார் 100 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் வயதுக்கு வரும் போது தான், இந்த நோய் உருவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நோயின் அரிய தன்மை காரணமாக, இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும் வழிகளும் தெளிவாக இல்லை.
அழ கூட முடியல..
இது பற்றி பேசும் அபிகைல், "என்னுடைய கண்ணீர் கூட என் முகத்தில் ஒரு விதமான காயத்தை உருவாக்கும். சராசரி மனிதனை போல நான் அழுதால் கூட, எனக்கு அது வேதனையை உண்டு பண்ணும். தண்ணீர் குடிக்கும் போது, எனது நெஞ்சு பகுதியில் வேதனை உருவாகி, இதயத் துடிப்பை அதிகரிக்கும். ஒரு ஆண்டுக்கும் முன்பு தான், கடைசியாக நான் தண்ணீர் குடித்தேன்.
இந்த நிலை இன்னும் மோசமானால், என்ன செய்வதென்று கூட எனக்கு தெரியவில்லை. மேலும், இது ஒரு அரிய நோய் என்பதால், இது பற்றி எதுவும் தெரியாத எனது மருத்துவர்களுக்கும் நான் தான் எனது நிலை பற்றி விளக்கம் கொடுக்கிறேன். மனிதனின் உடலே நீரால் ஆனது என்னும் நிலையில், தண்ணீருக்கும் எனக்கும் செட் ஆகாது என கூறினால், பலரும் என்னை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்" என அபிகைல் தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்