'கொரோனா' தொற்றுடன் 'ஆன்லைன்' க்ளாஸ் எடுத்த 'professor'... 'இறுதி'யில் மாணவர்கள் கண்முன்னே நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அர்ஜென்டினா (Argentina) நாட்டை சேர்ந்தவர் பவுலோ டி சிமோனே (Paola De Simone). கல்லூரி பேராசிரியான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்று இருந்து வந்துள்ளது.

'கொரோனா' தொற்றுடன் 'ஆன்லைன்' க்ளாஸ் எடுத்த 'professor'... 'இறுதி'யில் மாணவர்கள் கண்முன்னே நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!

கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும், பவுலோவிற்கு நோய் அறிகுறி சற்றும் குறையாமல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பவுலோ பதிவிட்டுள்ளார். இருந்த போதும், தனது மாணவர்களுக்கு வேண்டி ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போதே பவுலோ உயிரிழந்துள்ளார். முன்னதாக, பவுலோ நிலைகுலைந்து போவதைக் கண்ட வீடியோ காலில் இருந்த மாணவர்கள் பதறிப் போயுள்ளனர். இதனைக் கண்டதும், மாணவர்கள் ஆசிரியையின் முகவரியை கேட்டுள்ளனர். ஆனால், பவுலோ பதில் சொல்ல முயல்வதற்குள் அவர் உயிர் பிரிந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் அதிகம் பரவியது.

முன்னதாக, ஆசிரியை பவுலோவின் கணவர் மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில், தற்போதைய சூழ்நிலையில், அவரால் மனைவி இறந்த போது அருகே இருக்க முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் பவுலோ டி சிமோனே சிறந்த ஆசிரியை ஆகவும், அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசிரியை ஆகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

அவருடன் பணிபுரிந்த சக பேராசிரியர்கள் மற்றும் அவருடன் பயின்ற மாணவர்கள், அவரது மறைவின் காரணமாக சோகத்தில் ஆழ்ந்து போயுள்ளனர். மேலும், தங்களது இரங்கல்களையும் தெரிவித்து பேராசிரியருடனான சிறந்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்