Russia – Ukraine Crisis: "உக்ரைனுக்கு துணை நிற்போம்".. ஆப்பிள் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது போர் தொடுத்ததன் விளைவாக உலகின் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 20 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது. இந்நிலையில்,ரஷ்யாவில் இயங்கி வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவருகின்றன. அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

Russia – Ukraine Crisis: "உக்ரைனுக்கு துணை நிற்போம்".. ஆப்பிள் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு..

ஆப்பிள் பொருட்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருப்பது உலக அளவில் பேசு பொருளாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மொபைல் பொங்கல், டிவி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை ரஷ்யாவில் தடை செய்துள்ளது அந்த நிறுவனம்.

Apple to halt sales and limit services in Russia

கவலை

இந்நிலையில், இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். ரஷ்யாவின் வன்முறையால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு துணையாக நிற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக உலக நாடுகளின் விவகாரங்களில் மூக்கை நுழைக்காத ஆப்பிள் நிறுவனம் இந்த முறை ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பணப் பரிமாற்றம்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ஆப்பிள் பே செயலியும் ரஷ்யாவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் செல்போன் மூலம் பணம் அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"உக்ரைன் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆப்பிள் செல்போனில் செயல்பட்டு வரும் ஆப்பிள் மேப், லைவ் டிராக்கிங் மற்றும் டிராபிக் டிராக்கிங் செயலிகளின் சேவைகள் உக்ரைனில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது" என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைகைலோ ஃபேடாரோ ஆப்பிள் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், ரஷ்யாவில் சேவைகளை நிறுத்துமாறும் ஆப்பிள் பொருட்களுக்கு தடை விதிக்கும்படியும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்தக் கடிதத்தினை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில், ரஷ்யாவில் தனது பொருட்களின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Apple to halt sales and limit services in Russia

கூகுள் பே

இதேபோல, பிரபல மின்னணு பண பரிவர்த்தனை செயலியான கூகுள் பே செயலியையும் ரஷ்யாவில் மட்டுப்படுத்தி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்," ரஷ்யாவில் கூகுள் பே செயலி மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், முழுவதுமாக தடை செய்யப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஊடகங்களின் செய்திகளை பிற நாட்டினர் படிக்க முடியாத வகையில் கூகுள் நிறுவனம் முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

RUSSIA, UKRAINE, APPLE, GOOGLE, ரஷ்யா, உக்ரைன், ஆப்பிள், கூகுள்

மற்ற செய்திகள்