“கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா அழியாது.. அதுமட்டும்னா பரவால்ல..” - ஆடிப்போக வைக்கும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்தெருக்களில் கிருமி நாசினிகள் தெளிப்பதனால் கொரோனா வைரஸை கொல்ல முடியாது என்றும், மேலும் இது ஆரோக்கியத்துக்குக் கேடானது என்றும் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிருமி நாசினிகள் ஆங்காங்கே தெளிக்கப்படுகின்றன. பேருந்துகள், கட்டடங்கள், மக்கள் நுழையும் நுழைவு வாயில்களில் கிருமிநாசினிகளை தெளிக்கும் வகையில் கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் இதனால் கொரோனா வைரஸ் கொல்லப்படாது என்றும் இது பயனற்றது என்றும் அதைவிடவும் குறிப்பாக இந்த கிருமிநாசினியால் மனித ஆரோக்கியத்தின் ஆபத்துக்கும் கேடு உண்டாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
தனிநபர்கள் மீது கிருமி நாசினி செலுத்தப்படுவதால் உடல்ரீதியிலும் மனரீதியிலும் அவர்கள் பாதிப்படைவதாகவும், இதனால் கொரோனா பாதித்த ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படாது என்றும் தவிர, மக்கள் மீது குளோரின் அல்லது நச்சு கலந்த வேதியியல் மருந்தை தெளிப்பது கண் பாதிப்பையும், தோல் எரிச்சல், மூச்சுத்திண்றல், குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் வேண்டுமானால் கிருமிநாசினி மருந்தில் நனைக்கப்பட்ட துணி கொண்டு துடைப்பதன் மூலம் கிருமிகளை அழிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.