"ரஷ்யாவோட முக்கிய ரகசியங்கள் எல்லாம் இப்போ எங்க கையில".. பகிரங்கமாக அறிவித்த அனானிமஸ் ஹேக்கிங் குழு.. யார் இவர்கள்?
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா மீது சைபர் தாக்குதலை நடத்திவரும் அனானிமஸ் ஹேக்டிவிஸ்ட் கலெக்டிவ் குழு ரஷ்யாவின் முக்கிய தகவல்களை திருடியுள்ளதாக அறிவித்திருக்கிறது.
அனானிமஸ் ஹேக்டிவிஸ்ட் கலெக்டிவ்
இன்று உலகம் முழுவதும் துடிப்புடன் இயங்கி வரும் 'அனானிமஸ் ஹேக்டிவிஸ்ட் கலெக்டிவ்' குழு கடந்த 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் யார்? இதில் உள்ள உறுப்பினர்கள் யார்? என எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது.
இந்த நிழல் உலக குழு 'Guy Fawkes mask' என்பதே தங்களது அடையாளம் என்கிறது. புகழ்பெற்ற நாவல் ஆசிரியரான ஆலன் மூரின் 'வி ஃபார் வென்டெட்டா' நாவலை தழுவி உருவாக்கப்பட்ட முகமூடி மனிதர்களை குறிப்பதுதான் இந்த Guy Fawkes mask.
ஹேக்கிங்
சமீபத்தில் ரஷ்ய தொலைக்காட்சிகளை ஹேக் செய்த இந்த குழு, உக்ரைனில் நடத்தப்படும் தாக்குதல்களை அதில் ஒளிபரப்பினர். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. நேரலை நிகழ்ச்சிகளுக்கு இடையே சேனல்களை ஹேக் செய்யும் குழு, உக்ரைன் மக்களின் நிலை குறித்த வீடியோவை ஒளிபரப்பி வருகின்றனர்.
அதேபோல, ரஷ்யாவில் உள்ள பிரிண்டர்களை ஹேக் செய்த இந்தக் குழு, ரஷ்ய அரசிற்கு எதிரான வாசகங்களை பிரிண்ட் செய்திருக்கிறது. இந்தப் பணியில் 15 ஹேக்கர்கள் ஈடுபட்டதாகவும் இதுவரையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரிண்ட்கள் எடுக்கப்பட்டதாகவும் அந்தக் குழு தெரிவித்திருக்கிறது.
எச்சரிக்கை
இந்நிலையில், ரஷ்யாவில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்களை குறிவைத்து தாக்குதலை துவங்கி உள்ளது இந்த ஹேக்கிங் குழு. அந்த நிறுவனங்களுக்கு அனுப்பிய செய்தியில்," உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுங்கள். இல்லையேல், எங்களது அடுத்த இலக்கு நீங்கள் தான்" என எச்சரித்து உள்ளது.
ஏற்கனவே மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன. இந்நிலையில், அனானிமஸ் ஹேக்டிவிஸ்ட் கலெக்டிவ் குழு ரஷ்யா மீது சைபர் தாக்குதலை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்