'என் முன்னாடியே போட்டோ எடுக்குறியா'... 'இந்தா வச்சுக்கோ'... 'ட்விட்டரை கலக்கும் வைரல் வீடியோ'!
முகப்பு > செய்திகள் > உலகம்செல்ஃபி எடுக்க முயற்சித்து அதை தட்டி விடும் வீடியோகள் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் தற்போது ட்விட்டரில் வைரலாகும் இந்த வீடியோ நிச்சயம் நமக்கு புதிது தான்.

மிருகக்காட்சி சாலை ஒன்றில் யானையை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் ஒன்று சூழ்ந்திருந்தது. அந்த நேரத்தில் சுற்றுலா பயணி ஒருவர் யானை ஒன்றை போட்டோ எடுக்க முயற்சித்து, தனது மொபைல் போனில் போட்டோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்முனையில் இருந்த யானை என்ன நினைத்ததோ தெரியவில்லை, தனது தும்பிக்கையால் போட்டோ எடுத்த நபரை பட்டென்று அடித்து தள்ளி விட்டது. யானையின் தும்பிக்கை அடித்த வேகத்தில் அந்த நபர் கீழே சரிய, அவரது செல்போனும் கீழே விழுந்தது.
யானை தனது தும்பிக்கையை வைத்து அடித்த வேகத்தில் நிச்சயம் அந்த நபரின் முகத்தில் அடிபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதனிடையே இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
Idhu avar veetu yaanaiya irukumo!?!?.. 🙊🙊 pic.twitter.com/pM9BYdMZEg
— Pramod Madhav (@madhavpramod1) July 5, 2019